வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத் தளபதியும் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண பதில்தலைவருமான ரமணன் கருணாஅம்மானின் ரிஎம்விபியின் விசேட ஊடுருவித் தாக்கும் படையணியின் தாக்குதலில் பலி…..

Read Time:2 Minute, 20 Second

LTTE.Ramanan.gifTMVP.bmpஇன்றுமாலை 6.30மணிக்கு மட்டு.வவுணதீவுப் பிரதேசத்தில் வன்னிப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முள்ளாமுனைப் பகுதிக்கு அண்மையில் கருணாஅம்மானின் ‘ரிஎம்விபி”யின் விசேட படையணியினர் பதுங்கியிருந்து நடாத்திய கிளைமோர் தாக்குதல் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தில் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண இராணுவ புலனாய்வுத் தளபதியும் வன்னிப்புலிகளின் கிழக்குமாகாண துணைத்தளபதியுமான ரமணன் கொல்லப்பட்டுள்ளார். இவரது மெய்ப்பாதுகாவலர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து ‘ரிஎம்விபி”யின் ஊடகப் பேச்சாளர் தூயவன் அதிரடிக்குத் தெரிவிக்கையில் ‘மேற்படி ரமணனே கிழக்குமாகாண மக்களுக்கு துரோகமிழைத்தவர்களில் முதன்மையானவரெனவும், 10.04.2004ல் வன்னியில் இருந்து வந்த காடையர்களுடன் இணைந்து வெருகல் பகுதியில் எமது போராளிகளைப் படுகொலை செய்ததுடன் பெண்போராளிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்களில் இவர் முக்கியமானவரெனவும்” தெரிவித்தார்.
‘ரிஎம்விபி”யின் தூயவன் மேலும் அதிரடிக்குத் தெரிவிக்கையில் ‘வன்னிப்புலிகளுக்கெதிரான எமது தாக்குதல்கள் கிழக்கு மாகாணத்துடன் மட்டுப்படுத்தப்பட மாட்டாதெனவும் விரைவில் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படுமெனவும,; வன்னிப்புலிகள் வடக்கு கிழக்கின் எப்பகுதியில் இருந்தாலும் அவர்களைத் தேடித்தேடி அழிக்கும் நடவடிக்கை தொடருமெனவும்” தெரிவித்துள்ளார். Thanks…www.athirady.com

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமலை கிளைமோர்த் தாக்குதலில் இராணுவச் சிப்பாய் பலி
Next post புளொட் மத்தியகுழு உறுப்பினர் கடத்தல் தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை-