பெண்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற இது தான் வழி..!!
பெண்கள் முகத்தில் உள்ள முடிகளை நீக்க பல வழிமுறைகள் இருந்தாலும், அவை நிரந்தரமான தீர்வை கொடுக்காது. மாறாக, முன்னர் இருந்தை விட அதிகமான முடிகள் வளர அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை போக்க இயற்கையாகவும், அதிக செலவில்லாமலும் என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் முடி வளர்வதை தடுக்கலாம்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற எலுமிச்சை சாற்றை கொண்டு மசாஜ் செய்தால் தேவையற்ற முடி வளர்ச்சி குறையும் முகத்தின் அழகு கூடும்.
கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்குவதோடு, சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
அரும்பு மீசைபோல் உள்ள முடிகளை அகற்ற கஸ்தூரி மஞ்சள் தூள் 1 ஸ்பூன், காய்ச்சாத பால் 2 ஸ்பூன் ஆகியவை சேர்த்து முகத்தில் தடவ வேண்டும் தினந்தோறும் இதுபோல் செய்து வந்தால் நாளடைவில் முடி உதிர்வதுடன், முடியின் வளர்ச்சி குறையும். மேலும் சருமம் அழகு பெறும்.
Average Rating