சமுத்திரகனிக்காக குரல் கொடுத்த மோகன்லால்..!!
சமுத்திரக்கனியின் ‘நாடோடிகள்’ படத்தை தொடர்ந்து அவர் இயக்கி நடித்த ‘அப்பா’ படம் மலையாளத்தில் ‘ஆகாசமிட்டாய்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. ஜெயராம் நடிக்கும் இந்த மலையாள படத்தை சமுத்திரக்கனியே இயக்கி வருகிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் மோகன்லால் குரல் ஒலித்தது. இதற்கு நன்றி தெரிவித்து ஜெயராம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு சமுத்திரக்கனியின் ‘அப்பா’ படம் தமிழில் ரிலீஸ் ஆவதற்கு முன்பு அந்த படத்தின் விளம்பர வீடியோவிலும் மோகன்லால் அவரது அப்பாவை பற்றி பேசி அந்த படத்தை பிரபலப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.