டீசர் சாதனைக்கு நடுவே வெளியாகும் `விவேகம்’ டிரைலர்..!!

Read Time:1 Minute, 43 Second

201708151552303626_Vivegam-Trailer-to-rock-soon_SECVPFசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற 24-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் `விவேகம்’.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் – காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் இணைந்து நடித்திருக்கும் இப்படம் குறித்து ஒவ்வொரு நாளும் ருசீகரமான தகவல் வந்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில் `விவேகம்’ படத்தின் டீசர் உலகளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது.

படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கி வருவதால் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகமும் அஜித் ரசிகர்களிடைய எழுத் தொடங்கியது. இந்நிலையில், `விவேகம்’ படத்தின் டிரைலர் தயாராகி விட்டதாகவும், டிரைலர் குறித்த அறிவிப்பினை படத்தின் இயக்குநர் சிவா அறிவிப்பார் என்று `விவேகம்’ படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே படத்தின் டீசர் உலக சாதனை படைத்திருக்கும் நிலையில், டிரைலரும் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் சண்முக சுந்தரம் மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்..!!
Next post என் வாழ்வில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை – சமந்தா..!!