By 17 August 2017 0 Comments

தினமும் சாப்பிட வேண்டிய சத்தான காய்கறிகள்..!!

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)மாமிசம் உண்டு வாழ்பவர்களையும் பார்க்க காய்கறிகளை உண்டு வாழ்வோர் அதிக நாட்களுக்கு உயிர் வாழ்கிறார்கள் . காய்கறிகளில் பல சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன . ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்தவையாக காணப்படுகின்றன . ஆரோக்கிய வாழ்வுக்கு பெரிதும் உதவுகிறது காய்கறிகள் தான் .

இப்போதெல்லாம் இயற்கை உணவுகளை எல்லாம் செயற்கை மருந்துகளை தெளித்து விடுகிறார்கள் . கீரை வகை, பழவகைகள் போன்றவற்றிலும் உடனே செழித்து வளர இரசாயன மருந்துகளையும் , பூச்சிகள் அண்டாமல் இருக்க பலவகை கிருமி நாசினிகளையும் தெளிக்கிறார்கள் . இரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது.

உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோபிளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது.

கரட்டை நாம் பச்சையாகவே உண்ணலாம் . தக்காளியை ஜூஸ் ஆக அடித்து குடிக்கலாம் . எல்லோரும் கூடுமான அளவு பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு விட்டமின்களையும் , தாதுச் சத்தையும் ,நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இரத்த உற்பத்திக்கு மிக முக்கியமானது இரும்புச்சத்து. இச்சத்துக் குறைந்தால் இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படும். உடலும் பலவீனம் அடையும். காய்கறிளிலிருந்து அதிகமாய் இரும்புச்சத்து கிடைக்கிறது. கரட்டில் இரும்புச்சத்து அதிகம் உண்டு. தினமும் கரட்டை சாப்பிட்டு வந்தாலே போதும், இரத்த சோகை நோயே வராது . கரட்டை சம்பலாகவோ , வெள்ளை கறியாகவோ , வறையாகவோ செய்து சாப்பிட்டுபாருங்கள்.

இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகளிலும், பச்சையான – பசுமையான காய்கறிகளிலும், கீரைவகைகளிலும் கண்பார்வை தெளிவாகத் தெரியவும், கண்கள் ஆரோக்கியமாய் தொடர்ந்து இருக்கவும் கரோட்டின் என்னும் பொருள் இருக்கிறது. இது கண் பார்வை ஆரோக்கியத்துக்குத் தேவையான விட்டமின் ஏ-யை உடலில் தயாரித்துத் தந்துவிடுகிறது.

உடல்வளர்ச்சிக்கு ஆதாரமாய் இருப்பது புரதச்சத்து. உயிர் அணுக்களையும், திசுக்களையும் பழுதுபார்த்து எல்லா உறுப்புகளும் சீராய் இயங்கப் புரதச்சத்து தேவை. அவரைக்காயிலும், பச்சைப்பட்டாணியிலும் , பருப்பு வகைகளிலும் புரதச்சத்து அதிகமாய் இருக்கிறது. நமது உடல் செயல்படுவதற்கான ஆற்றலைக் கார்போஹைட்ரேட் என்று சொல்லப்படும் மாச்சத்து அளிக்கிறது.கிழங்கு வகைகளில் மாச்சத்து உண்டு . உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றில் மாச்சத்து அதிகம் இருக்கிறது.

விட்டமின் ஏ, விட்டமின் சி, இரும்பு, கால்சியம், நார்ச்சத்து, விட்டமின் பி ஆகியவைகளுக்காக காய்கறிகளை நாம் அதிகம் உண்ணவேண்டும். காய்கறிகளைபெரிய துண்டுகளாக வெட்டிச் சமைக்க வேண்டும். நீண்ட நேரம் அவியவைக்கக்கூடாது.

பல் ஈறுகளில் இரத்தம் கசிவதைத் தடுக்கவும், உடலில் களைப்பைத் தடுத்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதகரிக்கவும், விட்டமின் ‘ஈ’ நம் உணவில் தேவை. கீரை இனங்களில் விட்டமின் -சி அதிக அளவில உள்ளன. குறிப்பாக முட்டைக்கோஸ், தோட்டக்கீரை, அவரைக்காய், வெள்ளரிக்காய், முலாம்பழம், பசலைக்கீரை முதலியவற்றில்விட்டமின் ‘சி’ அதிகம்.

காய்கறிகளிலுள்ள நார்ப்பொருள்களே உணவுப்பொருள்களை விரைந்து செரிமானம் ஆக்கப்பயன்படுகின்றன. இவை இரத்தத்தில் கொலச்டோல் அளவைக் குறைத்து விடுகின்றன.

தினமும் மலம் நன்றாக வெளியேறச் செய்கின்றன. இந்த இரு பணிகளும் தவறாது நடைபெறக் காய்கறிகள், பழங்கள் முதலியவற்றில் உள்ள நார்ப்பொருள்கள் பயன்படுகின்றன. தக்காளி, கறிவேப்பிலை, அகத்திக்கீரை, புதினா, அவரை, முருங்கைக்காய் முதலிய காய்கறிகளில் நார்ப்பொருள்கள் தக்க அளவில் அமைந்துள்ளன. காய்கறிகளில் கல்சியமும் , இரும்பும் அதிக அளவில் உள்ளன.

இறைச்சி உணவுகளில் இருப்பதைவிடக் காய்கறி, பழம் போன்றவற்றில் சுண்ணாம்புச் சத்து அதிகமாய் இருக்கிறது. இதனால் முதுமையிலும் இளமைத்துடிப்புடன் , அழகான தோற்றத்துடன் நீண்ட நாட்களுக்கு வாழலாம் .

நாம் எமக்கு தெரிந்த விடயங்களை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் . எல்லோருக்கும் எல்லா விடயங்களும் தெரிந்திருக்க வேண்டும் . உங்களுக்கு காய்கறிகளில் பயன்கள் பற்றி தெரிந்திருந்தால் அயலவர்களுக்கும் அவற்றை சொல்லுங்கள் . இந்த சத்து இதில் உள்ளது . நீங்கள் இதை வாங்கி சாப்பிடலாம் . அப்படி உரையாடி நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .

காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அதிகம் . எல்லோரும் காய்கறிகளையும் அதிகம் விரும்பி சாப்பிடுங்கள் . மாமிசத்தையே எல்லா நாட்களும் சாப்பிடாமல் காய்கறிகளையும் உங்கள் உணவோடு சேர்த்து கொள்ளுங்கள் . உடம்புக்கு மிகவும் நல்லது . ஒவ்வொரு நாளும் ஏதாவது சத்துள்ள கீரைவகையோ , கிழங்கு வகையோ , வெண்டி, கரட் போன்றனவோ சேர்த்து கொள்ளுங்கள் .Post a Comment

Protected by WP Anti Spam