கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் நல்லெண்ணெய் மசாஜ்..!!

Read Time:2 Minute, 41 Second

201708181500586767_hair-problems-Sesame-oil-Massage_SECVPFதலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி நல்லெண்ணெயும் மிகவும் நல்லது. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் கனிமச்சத்துக்களுள் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டீன் போன்றவைகளும் உள்ளன. எனவே இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், முடி நன்கு வலிமையுடனும், உறுதியாகவும் இருக்கும்.

நல்லெண்ணெய் தலைமுடி வறட்சியடைவதைத் தடுக்கும். நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் சீயக்காய் போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி வறட்சியின்றி பட்டுப்போன்று இருப்பதோடு, உடல் சூடும் தணியும். நல்லெண்ணெய் பாதிக்கப்பட்ட தலைமுடிக்கு புத்துயிர் அளிக்கிறது.

எப்படியெனில் இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, அது தலையினுள் நுழைந்து, மயிர் கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மன அழுத்தம் தான் இன்றைய தலைமுறையினருக்கு தலைமுடி உதிர காரணமாக உள்ளன. நல்லெண்ணெயில் உள்ள பண்புகள், முடி உதிர்வதைத் தடுக்கும். அதற்கு நல்லெண்ணெய் கொண்டு, தலையை மசாஜ் செய்ய வேண்டும்.

நல்லெண்ணெயைக் கொண்டு வாரம் ஒருமுறை மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி மேம்படும். வேண்டுமானால் இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெய் போன்று தினமும் பயன்படுத்தலாம்.

நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் பொடுகு தொல்லை நீங்கும். அதற்கு நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர பொடுகு பிரச்சனை நீங்கியிருப்பதைக் காணலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுமணத் தம்பதிகள் உடலுறவுக்குத் தயாராவது எப்படி?..!!
Next post நடக்கும் மீன், பாண்டா எறும்பு… இதுவரை பார்த்திராத விசித்திர விலங்குகள்..!!