நெஞ்சை உருக்கும் துயரம்… குழந்தையுடன் நொடிப்பொழுதில் உயிரைவிட்ட தாய்..!! (வீடியோ)
பீகாரில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி தாய், மகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில், பீகார் வெள்ளப்பெருக்கில் சாலை அடித்து செல்லப்பட்ட நிலையில், பல மக்கள் உடைந்த சாலையில் மேல் கடந்து செல்கின்றனர்.
அப்போது, தாய் தனது மகள் மற்றொரு ஆணுடன் கடந்த செல்லும் போது சாலை உடைந்து தாயும், சிறிய மகளும் வெள்ளத்தில் அடித்துச்செல்கின்றனர்.
உடன் வந்த ஆண் அதிர்ஷ்டவசமாக சாலையின் மறுபக்கம் விழுந்து உயிர் தப்பிக்கிறார். அங்கிருந்த மக்கள் இரண்டு உயிர்களையும் காப்பாற்ற முடியாமல் நின்று வேடிக்கை பார்கின்றனர்.
சம்பவயிடத்திலிருந்த ஒருவர் தனது போனில் பதிவு செய்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.