பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது நல்லதா?..!!

Read Time:4 Minute, 35 Second

201708191341543714_Is-it-good-to-sprinkle-salt-in-fruit_SECVPFசிலர் உப்பை பழங்களில் சேர்த்து சாப்பிடுவார்கள். இப்படி பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களின் சுவை அதிகரிப்பதோடு, வேறு சில காரணங்களும் அடங்கியுள்ளன.

பழங்களில் எண்ணற்ற நுண்கிருமிகளான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். அதனைத் தடுத்து, பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு பயன்படும்.

முக்கியமாக உப்பு சிறந்த கிளின்சர் போன்று செயல்படும். பிரஷ்ஷான பழங்களை உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால், அதில் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் இதர கெமிக்கல்கள் நீங்கிவிடும்.

அதிக அமிலங்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்றவை வயிற்றில் அதிக அளவில் அசிடிட்டியை ஏற்படுத்தும். இப்பழங்களில் நார்ச்சத்து, வைட்டமின்கள் அதிகமாக இருப்பதோடு, அசிட்டிக் pH 3-3.3 உள்ளது. இப்பழங்களுடன் உப்பு சேர்த்து உட்கொண்டால், அது வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், உண்ணும் பழங்களின் சுவை அதிகமாகும். குறிப்பாக பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், பழங்களில் உள்ள புளிப்பு குறைவதோடு, பழங்கள் கனியாமல் இருந்தாலும் பச்சை வாசனை தெரியாது. இதனால் தான் பலரும் பழங்களில் உப்பு தூவி சாப்பிடுகிறார்கள்…

எவ்வளவு ருசியான சாப்பாடாக இருந்தாலும், அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவை நம்மால் சாப்பிடவே முடியாது. ஆனால் அதே வகையில் நாம் சாப்பிடும் உணவில் உப்பு அதிகமாக இருந்தாலும் அதை சாப்பிடவே முடியாது. எனவே எந்த உணவாக இருந்தாலும் அதை அளவாக பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது.

உப்பானது நாம் சாப்பிடும் உணவின் ருசியை அதிகரிப்பதில் உப்பு முக்கிய பங்கினை வகிப்பதால், சிலர் அந்த உப்பை பழங்களில் கூட தூவி சாப்பிடுவார்கள்.

பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

நாம் பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் சுவை இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.

பழங்களில் இருக்கும் எண்ணற்ற நுண்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து, பழங்கள் பிரஷ்ஷாக இருக்க உப்பு பயன்படுகிறது.

உப்பு சிறந்த கிளின்சர் போன்று செயல்படுகிறது. எனவே பிரஷ்ஷாக இருக்கும் பழங்களை உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால், அதில் உள்ள பூச்சிக் கொல்லிகள் மற்றும் இதர கெமிக்கல்கள் நீக்கப்படுகிறது.

அமிலங்கள் அதிகமாக நிறைந்த சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்றவை வயிற்றில் அதிக அளவில் அசிடிட்டியை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பழங்களில் உப்பை தூவி சாப்பிட்டால், அது வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலைப்படுத்தி, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையைத் தடுக்கிறது.

புளிப்புச் சுவையுள்ள பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவதால், அந்த பழங்களின் புளிப்பு குறைந்து மிகவும் சுவையாக இருக்கும். மேலும் சில கனியாத பழங்களை சாப்பிடும் போது, அதில் உள்ள பச்சை வாசனை வராமல் இருப்பதற்கு உப்பை தூவி சாப்பிடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாகுபலி பிரபாஸின் அடுத்த அதிரடி ஆரம்பம்..!!
Next post கரடியுடன் போராடிய இளைஞர்: சிசிடிவியில் பதிவான காட்சி..!! (வீடியோ)