தொடர்ந்து 5 வருடங்களாக நிலத்துக்கு வராமல் வானில் பறக்கும் ஒரே அதிசய பறவை..!!

Read Time:4 Minute, 0 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90கப்பலில் நெடுங்கடலில் பயணிப்பவர்கள் இந்த பறவையை பார்த்திருக்கலாம். ஆழ்கடலில் பயணம் செய்யும்போது கப்பலில் இருந்து அமர்ந்து மனிதர்களைப் பரவசப்படுத்தும் பறவை இது.கடலில் கிடைக்கும் கனவாய், மற்றும் குறில் மீன்களையும் சிறிய விலங்குகளையும், கப்பலில் இருந்து கொட்டப்படும் உணவுப்பொருட்களையும் விரும்பி சாப்பிடும் இந்த பறவையின் பெயர் ஆல்பற்றோஸ்.

பெருங்கடல்களுக்கு இடையே உள்ள சிறு சிறு தீவுகளில் கூட்டம் கூட்டமாக வசிக்கும் பறவை இது. இனப்பெருக்க காலங்களில் கூடு கட்டிக்கொள்ளும்ஒவ்வொரு ஆல்பற்றோஸ் பறவைகளும் தனக்கென ஒரு துணையை தேர்வு செய்து வாழ்நாள் முழுவதும் அந்த துணையுடனே வாழும்.ஒரு பெண் பறவை ஒரே ஒரு முட்டையை மட்டுமே இடும். இதனால்தான் இதன் இனப்பெருக்கம் மிக மெதுவாக நடைபெறுகிறது.

இப்படி மெதுவாக இனப்பெருக்கம் நடைபெறும் உயிரினம் ஒன்று இவ்வளவு நாட்கள் உயிரோடு இருப்பது பெரும் ஆச்சிரியம்தான். “ தென் அந்தாட்டிக் பெருங்கடலிளும், வட பசுபிக் பெருங்கடலிலும் இந்த பறவைகள் பெருமளவு வாழ்கின்றன.இந்த கடற்பறவை வெண்மை நிற கழுத்தும், பெரிய அலகும், மிகப்பெரிய இறக்கைகளையும் கொண்டிருக்கும். இதன் கால்கள் வாத்தின் கால்களைப்போல் சதைபிணைப்பு கொண்டவையாக இருக்கும். ஆனாலும் இதன் கால்கள் வலிமை நிறைந்தே காணப்படுகின்றன.

பூமியில் வாழும் பறவைகளில் மிகப்பெரிய இறக்கைகளை கொண்ட பறவை இனம் இதுதான். இதன் ஒரு பக்க இறக்கை மட்டும் 15 அடி நீளம் கொண்டது. இந்த பறவை இனத்தில் மொத்தம் 21உள் இனங்கள் உள்ளன.

இவற்றில் 19 இனங்கள் அழிந்து வரும் உயிரின பட்டியலில் இடம்பெற்றுள்ளது. பூமியில் தெற்கு பகுதியில் உள்ள கடல்களில் தான் ஆல்பற்றோஸ் அதிகளவில் வாழ்கின்றன.முட்டையை விட்டு குஞ்சி வெளியே வந்து பறக்கத்தொடங்கி விட்டால் அதன் பின் இந்த பறவைகள் கீழே இறங்குவதே இல்லை. கீழே இறங்காமல் ஏறத்தாள 5 வருடங்கள் பறக்கும் ஒரே தன்மை கொண்ட அதிசய பறவை இதுதான்.

பறந்து கொண்டே கடல் மீன்களை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும், பறந்து கொண்டே தூங்கும். இதன் நீளமான இரு பக்க இறக்கைகளை விரித்து பறந்தால் நாட்கணக்கில் இறக்கைகளை அசையாமல் விமானம் போல் பறந்து கொண்டே இருக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 640 கிலோ மீட்டர் தொலைவில் பறக்கின்றது. இந்த பறவை கடல் பயணத்தின் வழிகாட்டி. இவற்றை துன்புறுத்தினாலோ, கொன்று விட்டாலோ கப்பல் கடலில் மூழ்கிவிடும் என்று கடற்பயணிகளின் நம்பிக்கை.

அப்படியான நம்பிக்கையால்தான் இந்த பறவை மனிதனின் மாமிச வேட்டையில் இருந்து தப்பித்து கொள்கின்றது. மெதுவாக இனப்பெருக்கம் செய்யும் இந்த பறவை இவ்வளவு காலம் உயிர் வாழ்வதற்கு இந்த நம்பிக்கை தான் காரணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனித எலும்புக்கூடுகளால் நிறைந்த மர்ம ஏரி!! ஒரு தேவதையின் கோபப் பார்வைதான் காரணமாம்..!!
Next post ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்கலாம்..!!