என் மகள் சினிமாவில் நடிப்பது பெருமை: அர்ஜூன்..!!
அர்ஜுன் நடித்த 150-வது படம் ‘நிபுணன்’. தற்போது தனது மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘சொல்லிவிடவா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். மகள் சினிமாவில் நடிப்பது குறித்து அவரிடம் கேட்டவர்களுக்கு அர்ஜுன் அளித்த பதில்…
“நான் இவ்வளவு பெரிய புகழ் பெற்றிருப்பதற்கு காரணம் சினிமாதான். இதில்தான் எல்லாம் சம்பாதித்தேன். சினிமா கொடுத்த சாப்பாட்டைதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என் தொழில்தான் எனக்கு எல்லாம். இதை தவறாக நானே நினைக்க கூடாது.
என் மகளை சினிமா நடிகை ஆக்கியதை பெருமையாகவே கருதுகிறேன். என் மகளைப் போல எத்தனையோ பெண்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சினிமா மிகவும் பாதுகாப்பான தொழில் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் என் மகள் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் விஷாலின் ‘பட்டத்துயானை’ படத்தில் அறிமுகம் செய்தேன். மகிழ்ச்சியுடன் சிறப்பாக நடித்து வருகிறார்”.
இவ்வாறு கூறினார்.