19 அடி கூந்தலுடன் வலம் வரும் விசித்திர பெண்..!!
Read Time:1 Minute, 18 Second
பொதுவாக பெண்களுக்கு முடி நீளமாக இருப்பது மிகவும் விருப்பமான விடயமாகும். நியூயார்க்கில் வசிக்கும் ஆஷா மண்டேலா என்பவர் உலகத்திலே மிகவும் நீண்ட அடர்த்தியான கூந்தலை கொண்டவராக கருதப்படுகின்றார்.உலகிலேயே மிக நீளமான சடைமுடி கொண்டவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வசிக்கும் 52 வயது ஆஷா மண்டேலாவின் கூந்தல் நீளம் சுமார் 19 அடி, எடை 39 பவுண்டுகள் (17 கிலோவுக்கும் அதிகம்).
>இதனை குறித்து ஆஷா மண்டேலா, முடியை வெட்ட நினைப்பது தற்கொலைக்கு முயல்வதற்கு ஒப்பானதாக இருக்கும் என கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து ஆஷா, கடந்த 25 ஆண்டுகளாக இந்த கூந்தலை ஆர்வத்துடன் வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.இதற்காக கடந்த 2013-ம் ஆண்டு கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating