`கபாலி’ படத்தின் சாதனையை முறியடித்த அஜித்தின் `விவேகம்’..!!

Read Time:2 Minute, 4 Second

201708261101477703_Vivegam-beats-Kabali-and-creates-new-record-in-Chennai-BO_SECVPFசிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் – அக்‌ஷரா ஹாசன் – விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் `விவேகம்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

பலவித விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்நாள் வசூலிலும் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `கபாலி’ படத்தின் முதல்நாள் சாதனையை `விவேகம்’ படம் முறியடித்திருக்கிறது.

சென்னையில் `கபாலி’ படம் முதல் நாளில் ரூ.1.12 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், `விவேகம்’ படம் ரூ.1.21 கோடியை வசூலித்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறது. விஜய்யின் தெறி ரூ.1.05 கோடியுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

கேரளாவில் மட்டும் முதல்நாள் வசூலாக ரூ.2.90 கோடியை `விவேகம்’ படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கிட்டத்தட்ட ரூ.2 கோடி வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தமாக ரூ.16.20 கோடியும், இந்தியா முழுக்க ரூ.25.83 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ரூ.1.38 கோடியை `விவேகம்’ படம் வசூலித்திருப்பதாகவும், இது விஜய்யின் `பைரவா’ வசூலை விட குறைவே என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளியே வந்தும் பிக்பாஸில் ஓங்கி நிற்கும் ஓவியா… குற்றவாளி கூண்டில் சினேகன் கூறியது என்ன தெரியுமா?..!! (வீடியோ)
Next post கர்ப்பமான மகளை கண்மூடித்தனமாக தாக்கிய தாய்: இரத்த காயங்களுடன் கதறிய பரிதாபம்..!! (வீடியோ)