விரைவில் கருப்பனை இறக்கும் இமான்..!!

Read Time:1 Minute, 24 Second

201708271606074606_audio-of-karuppan-to-be-launched-very-soon_SECVPF‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கருப்பன்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்துவருகிறார். மேலும் பாபி சிம்ஹா வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். ‘ரேனிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாக ‘கருப்பன்’ படத்தை உருவாக்கி வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட இருப்பதாக இப்படத்தின் இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷக்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஸ்லிம்களின் இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப காணி இல்லை..!! (கட்டுரை)
Next post மீண்டும் சூடுபிடித்த பிக்பாஸ்… வெளியே சென்றவர்கள் விருந்தாளியாக வந்த அதிர்ச்சி… இதில் ஓவியா வருவாரா?..!! (வீடியோ)