முகப்பருவை போக்க தகுந்த சிகிச்சை தேவை..!!

Read Time:2 Minute, 42 Second

201708281414318820_Proper-treatment-is-needed-to-pimples_SECVPFமுகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும்.

சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். இதற்கு, ஃபாலிகுலர் ஹைப்பர்கெரட்டோஸிஸ் (follicular hyperkeratosis) என்று பெயர். வைட்டமின் ஏ, டி அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் ஆகியவற்றின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது.

பரு வராமல் தடுக்க :

அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், கேலமைன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம்.

தினமும் ஐந்து முறை முகத்தை உங்கள் சருமத்துக்கு ஏற்ற சோப்பினால் கழுவ வேண்டும்.

ஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு இரண்டையும் சம அளவு எடுத்து, பால் விட்டு நைஸாக அரைத்து, பருக்களின் மீது பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும். நிறமும் கூடும்.

எலுமிச்சம்பழச் சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும்.

ஆறு மாதங்கள் தொடர்ந்து டாக்டரின் அறிவுரையின் பேரில் மாத்திரை, மருந்துகள் மற்றும் களிம்பு பயன்படுத்துவதன் மூலம், முகப்பரு மறுபடியும் வராமல் தடுக்கலாம்.

பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மை உள்ள மரு, டாட்டூ மற்றும் பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சைமுறைகள் உள்ளன.

அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக்கொண்டு மட்டுமே குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்குத் தகுந்த சிகிச்சைமுறையைத் தேர்வு செய்வதன்மூலம், வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் பிரச்சனைகளை பற்றி தம்பதிகள் மருத்துவர்களிடம் கூறுவது எப்படி?..!!
Next post மரத்துடன் உடலுறவில் ஈடுபடும் விசித்திர ஆண்..!!