By 29 August 2017 0 Comments

பிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு : பத்மபிரியா..!!

201708291554359195_Popular-actresses-have-a-sexual-problem-Padmapriya_SECVPFதிருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன பத்மபிரியா இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தற்போது தமிழில் ‘சிவரஞ்சினியும், இன்னும் சில பெண்களும்’, இந்தியில் ‘சீப்’, மலையாளத்தில் ‘கிராஸ்ரோடு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து பத்மபிரியா கூறும்போது, “ஒரு சினிமாவில் முக்கிய பாத்திரம் கிடைக்க வேண்டும் என்றால் நடிகை படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், சினிமா வாய்ப்பு கிடைக்காது என்றால், அதையாரால் ஏற்றுக்கொள்ள முடியும்?

புதிய நடிகைகளுக்கு மட்டுமல்ல, பெயரும்-புகழும் கொண்ட பிரபல நடிகைகளுக்கும் இதுபோன்ற வி‌ஷயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் சினிமாவில் இருந்தே ஆகவேண்டும் என்று நினைப்பதால் இந்த நிலை. அப்படி படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவரும் வெற்றி அடைவார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா?

இதுபோன்ற வி‌ஷயங்களை நான் தவிர்த்ததால் ஒதுக்கப்பட்டிருக்கிறேன். நல்ல கதை இருந்தால் தான் நான் நடிப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். நடிப்பை தவிர வேறு எதுவும் என்னிடமிருந்து அவர்களுக்கு கிடைக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். இதனால் தான் வேண்டாம் என்று என்னை ஒதுக்குகிறார்கள்” என்றார்.



Post a Comment

Protected by WP Anti Spam