மலச்சிக்கல், செரிமான பிரச்சினையை போக்கும் கோதுமை..!!

Read Time:2 Minute, 6 Second

201708300829259357_Constipation-and-digestive-problem-control-wheat_SECVPFகோதுமை உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தவிடு உள்பட முழு தானியமாக கோதுமையின் அனைத்து பாகங்களும் உணவாக உபயோகப்படுத்தப்படுகின்றன. அதனால் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.

மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினை உடையவர்கள் காலை உணவில் கோதுமை சேர்த்து கொள்ளலாம் என்றும் டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடல் இயக்கம் சீராக நடைபெறவும், நாள்பட்ட நோய் தாக்கங்களில் இருந்து விடுபடவும் கோதுமை ஓரளவு உதவுகிறது. கோதுமையில் நார்ச்சத்துக்கள் அடர்த்தியாக இருக்கின்றன.

அவை செரிமான கோளாறு களை கட்டுப்படுத்தவும், கொழுப்பு அளவு சீராக இருக்கவும் துணைபுரிகின்றன. உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் கொழுப்பு அளவை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைப்பதற்கு கோதுமையின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது.

இரும்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் அதனை ஈடுகட்ட கோதுமை உணவுகளை சாப்பிட்டு வரலாம். அதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. மேலும் கோதுமையில் இருக்கும் வைட்டமின் பி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. நரம்பு மண்டலம் பலகீனமாக இருப்பவர்கள் கோதுமை உணவை சாப்பிட்டு வருவது நல்ல பலனை கொடுக்கும். நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதிலும் கோதுமைக்கு பங்கு இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறள் 146 மூலம் இயக்குனராகும் கலை இயக்குனர் உமா ஷங்கர்..!!
Next post ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்த உலக அழகியின் புகைப்படம்! யார் செய்த வேலை?..!!