நாகரீக தோற்ற பொலிவை தரும் ஜீன்ஸ் பேண்ட்கள்..!!

Read Time:5 Minute, 22 Second

201708311026236332_Jeans-pants-that-give-a-fashionable-look_SECVPFஜீன்ஸ் பேண்ட் இன்றைய நாளில் அனைத்து வயது ஆண்களும் விரும்பி அணியும் ஆடையாக உள்ளது. நவநாகரீக தோழனாக ஜீனஸ் பேண்ட் விளங்குவதால் எந்தநாளிலும், எந்த பார்ட்டி மற்றும் கொண்டாட்டங்களிலும் அணிந்து கொள்கின்றனர். ஜீன்ஸ் பேண்ட் அணிவதை ஆண்களின் கம்பீரமும், ஆளுமையும் அதிக அளவு வெளிப்படுவதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் மட்டுமே விரும்பி அணிந்த ஜீன்ஸ் பேண்ட் இன்றைய நாளில் பிற வயது ஆடவர்களும் அணிய கூடியதாக உள்ளது. உடலோடு இறுக்கி பிடித்தவாறு கனகச்சிதமான தோற்றப் பொலிவை தருவதுடன் சுலபமாக தங்கள் அன்றாட பணிகள் செய்ய ஏதுவானதாகவும் உள்ளது.

கேஸ்வல் மற்றும் பார்ட்டிகளுக்கான ஆடை என்றவாறு கருதப்பட்ட ஜீன்ஸ் பேண்ட் தற்போது பிசினஸ் கேஸ்வல் என்றவாறு அணிவதால் அலுவலகம் செல்லும்போதும் ஒரு சில நாட்கள் அணிந்து செல்கின்றனர். இதன் காரணமாக மாறுபட்ட வண்ண சாயல் மற்றும் தற்போதைய டிரெண்டிற்கு ஏற்ப ஜீன்ஸ் பேண்ட் வரவும், உபயோகமும் மாறுபடுகின்றன. ஜீன்ஸ் தயாரிப்பவர்களும் சில மாற்றங்களுடன் புதிய புதிய பேண்ட், வடிவமைப்பு மற்றும் வண்ணங்களை அறிமுகப்படுத்துகின்றனர்.

பாரம்பரிய அடர் நீல ஜீன்ஸ், வெளிர் நிற நீல ஜீன்ஸ், ரிப்பிடு ஜீன்ஸ், வெள்ளை ஜீன்ஸ், கருப்பு ஜீன்ஸ், கிரீஸ் லைன் ஜீன்ஸ், ஸ்லிம் பிட் ஜீன்ஸ், ஜாக்கர் ஜீன்ஸ் என்றவாறு பல வகைகள் உள்ளன. அவற்றில் நமது தேவையை எவை பூர்த்தி செய்கின்றன என்பதுடன் எது காலத்திற்கு ஏற்ப ஒத்துபோகிறது என்பதும் அறிவது அவசியம்.

தற்போதைய டிரெண்டிங் வெள்ளை ஜீன்ஸ், அதிக கவனத்தை தருகின்றன. தமது பணியிடங்களுக்கு அணிந்து செல்லக்கூடிய கேஸ்வல் ஆடையாக அழகிய தோற்றத்துடன் விளங்குகிறது. இது பிசினஸ் கேஸ்வல் ஆக அணிந்த போதும் இதன் தோற்றம் பார்ட்டிக்கு அணிந்து செல்லக்கூடியது போன்று தோற்றமளிக்கும். இதில் ஏதும் புதிய வடிவமைப்பை பெற நினைத்தால் சிராய்ப்பு மற்றும் வெட்டப்பட்ட ஜீன்ஸ் வகைகளையும் வெள்ளை நிறத்தில் அணியலாம்.

சிராய்ப்பு செய்யப்பட்ட ஜீன்ஸ்:

ஜீன்ஸ் பேண்ட்டின் மேற் பகுதியில் வண்ண பகுதி சிராய்ப்பு செய்யப்பட்டு உள்வெளிர் பகுதி தெரியும்படி உள்ள ஜீன்ஸ் பேண்ட் – இது கேஸ்வல் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு அணிய ஏற்றவாறு டிஸ்டிரஸ்டு ஜீன்ஸ் உள்ளது. டிஸ்டிரஸ்டு ஜீன்ஸ் பேண்டின் பாக்கெட் பகுதி தொடையின் மேல் பகுதியில் இழுக்கும். சிராய்ப்பு செய்யப்படுவது என்பது பேண்டின் முட்டி பகுதி மற்றும் தொடைப்பகுதிகளில் அதிகமாக உள்ளவாறு வடிவமைக்கப்படுகிறது.

கிரிஸ் லைன் வாஷ்டு ஜீன்ஸ்:

அடர்நீல ஜீன்ஸ் பேண்ட் என்பது மேம்பட்ட வாஷ் செய்யப்பட்டு வெளிர் நிர சாயலுடன் கிரிஸ் லைன் கொண்டவாறு உருவாக்கப்படுகிறது. ஆக வடிவமைப்பின்றி ஓர் மங்களான தோற்றத்துடனே உருவாக்கப்படுகிறது. கேஸ்வல் ஜீன்ஸ் பேண்ட் ரகமாக இது உள்ளது.

பார்ட்டிகளுக்கு அணி ஏற்ற கருப்பு ஜீன்ஸ்:

முற்றிலும் கருப்பு நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட்கள் ஸ்மார்ட்டான தோற்றப் பொலிவை தருகின்றன. எப்போது இதனை அணிந்திருந்தாலும் பார்ட்டி லுக் தருவதுடன் கமபீரத்தையும் தருகிறது. கருப்பு நிற ஜீன்ஸில் மங்கலான தோற்றம் மற்றும் வெளுக்கப்பட்டது போன்றவை நன்றாக இருக்காது. எனவே முழுக்க முழுக்க கருப்பாய் உள்ளதே சிறப்பானது.

ஜாக்கர் ஜீன்ஸ்:

ஸ்டைலான இளைஞர்கள் அணிகின்றவாறு கணுக்கால் பகுதியில் இறுக்கிப் பிடிக்கும் எலாஸ்டிக் அமைப்புடன் உள்ளது. ரிப்படு, வாஸ்டு, டிஸ்டிரஸ்டு என அனைத்து வகையிலும் ஜாக்கர் ஜீன்ஸ் கிடைக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்களின் பாலியல் ஆசை குறைவதற்கான 5 காரணங்கள்..!!
Next post ஓவியாவை மிரட்டும் விஜய் டிவி நிறுவனம்..!! (வீடியோ)