மோசமான பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு..!!

Read Time:2 Minute, 37 Second

201709021008302474_Worst-dandruff-control-onion-juice_SECVPFபொடுகு பூஞ்சை தொற்றால் உருவாகிறது. அதிக வறட்சியினாலும் உண்டாவது. பொதுவாக தலையில் சுரக்கும் எண்ணெயினால் உங்கள் ஸ்கால்ப் பாதுகாக்கப்படுகிறது. குளிர்காலத்தில் அதிக குளிரினால் எண்ணெய் சுரப்பது குறைந்து கிருமிகளின் தோற்றால் பொடுக்கு இன்னும் அதிகமாகிவிடும்.

இதற்கு வெங்காயச் சாறு எப்படி உபயோகப்படுத்தினால் பொடுகு போக்கலாம் என்று இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. உபயோகித்து அதன் பயனை பெறுங்கள்.

புடலங்காய் சாறு மற்றும் வெங்காயச் சாறு : புடலங்காய் அரைத்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். காய்ந்ததும் தலைமுடியை அலசவும்.

பாசிப்பயிறு மற்றும் வெங்காயச் சாறு : பாசிப் பயிறை பொடி செய்து அதனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவி ஊற விடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.

பீட்ரூட் சாறு மற்றும் வெங்காயச் சாறு : பீட்ரூட் பொடுகை கட்டுப்படுத்தும். அதன் சாறு எடுத்து அதனுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.

ஆப்பிள் ஜூஸ் மற்றும் வெங்காயச் சாறு : ஆப்பிள் மற்றும் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். வாரம் 3 முறை செய்து பாருங்கள். கூந்தல் அடர்தியாகவும் பொடுகின்றியும் ஆரோக்கியமக திகழும்.

கற்றாழை மற்றும் வெங்காயச் சாறு : கற்றாழை சதைப் பகுதியுடன் சின்ன வெங்காயச் சாறு கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை தரும்.

வெந்தயம் மற்றும் வெங்காய சாறு : 2 ஸ்பூன் அளவு வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் அதனை அரைத்து அதனுடன் சின்ன வெங்காய சாறி அரை கப் கலந்து தலையில் தடவுங்கள். 30 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விந்து வெளியாகும் முன்பு ஆண்குறியை வெளியே எடுக்கும் கருத்தடை முறை..!!
Next post 9 மணி நேரத்தில் இறந்துவிடும் என்று கூறப்பட்ட குழந்தையின் தற்போது நிலை என்ன தெரியுமா?..!! (வீடியோ)