கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகள்..!!

Read Time:2 Minute, 36 Second

201709050827063771_Foods-that-protect-the-health-of-the-eyes_SECVPFகண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவு பழக்க வழக்கங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டசத்து உணவுகளை சாப்பிடுவது கண் நோய்கள் வராமல் காக்கும்.

வைட்டமின்கள் சி மற்றும் ஈ, கரோட்டினாய்டுகள், பீட்டா கரோட்டின், லூடீன் மற்றும் ஜியாசாந்தின், துத்தநாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய உணவு பொருட்கள் கண்களின் நலனை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை. வைட்டமின்கள் பி6, பி9, பி12 ஆகியவற்றில் போலிக் அமிலம் நிரம்பி யிருக்கிறது. ஆகையால் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ நிறைந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டுவர வேண்டும்.

அடர் பச்சை நிற காய்கறிகளில் வைட்டமின்கள் ஏ, ஈ மற்றும் பி அதிகம் நிறைந்திருக்கிறது. அவைகளை சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகளை சாப்பிடுவதன் மூலம் கண் நோய் பாதிப்புக்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.

இறைச்சி வகைகள், முட்டை, பால் பொருட்கள், வேர்க்கடலை மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றில் துத்தநாகம் அதிகம் இருக்கிறது. வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. வாழைப்பழங்கள், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றில் வைட்டமின் 6 உள்ளடங்கியிருக்கிறது. சிட்ரஸ் பழங்கள், பச்சை இலை காய்கறிகள், காளான்கள், பட்டாணி போன்றவற்றில் போலிக் அமிலம் நிறைந்திருக்கிறது.

அவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். புழுங்கல் அரிசி, கோதுமை ரொட்டி, பார்லி போன்ற தானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேவேளையில் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெள்ளை அரிசி சாதத்தை தவிர்ப்பது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆர்த்தி செய்த வேலை, ஜுலி உச்சக்கட்ட கோபம்..!! (வீடியோ)
Next post தமிழ் பற்றோடு அழகாக தமிழ் பேசும் இத்தாலி நாட்டுப் பெண்..!! (வீடியோ)