பிரான்ஸில் வீசும் மல்லிகை வாசம்..? பெண் போலீசார் கட்டாயமாக பூ வைக்க வேண்டுமா?..!!

Read Time:3 Minute, 42 Second

625.137.560.350.160.300.053.800.228.160.90 (3)தலையில் பூ மாலை அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரி..ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய தேர்திருவிழாவில் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் போலீஸ் அதிகாரிகளை பார்த்து பலர் வியந்துள்ளனர், அத்துடன் நம் தமிழ் மாடல் அழகிகளை பார்த்து பலர் கேள்வியும் கேட்டுள்ளனர்.

“எனக்கு கொஞ்சும் கொஞ்சும் தான் தமிழ் தெரியும் ” என வெட்டி சீன் போடும் நம்ம பெண்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது கடமையில் ஈடுபட்ட பெண் போலீஸ் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்டனர்.

பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவில் பாரிஸ் வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் திருவிழாவில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் அதிகாரிகள், தமிழ்ப்பெண்கள் அணிவது போல தலையில் பூமாலை அணிந்து காணப்பட்டனர்.இதனை பார்த்து தமிழர்கள் ஆச்சரியமடைந்துள்ளதுடன் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.தமிழ் கலாச்சாரத்தில் பிறந்து வளர்ந்து தலையில் பூ வைத்து செல்ல விரும்பாத சில தமிழ் பெண்கள் இவர்களை பார்த்தாவது தம்மை மாற்றிக்கொண்டு தமிழ் கலாச்சாரத்தின் சிறப்பையும் பெருமையையும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரிஸ் மாணிக்கப்பிள்ளையார் தேர்த்திருவிழாவின் போது பல வேற்று இனத்தவர்கள் தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்துநின்றனர் என்பது குறிபிடதக்கது..உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன. ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.பூக்களின் பயன்கள்..

ரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.செண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.பாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.செம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணேஷ், ஆர்த்தியை காப்பற்ற மாதாவை வேண்டிய ஜூலி – நடந்து என்ன..!!
Next post கர்ப்பமான பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்! வைரலாகும் வீடியோ..!!