By 7 September 2017 0 Comments

வடஇந்தியாவுக்கு செல்லும் ‘சாமி-2’ படக்குழு..!!

201709071051226947_Saamy2-set-in-North-India_SECVPF
ஸ்கெட்ச்’ படத்தை முடித்துள்ள விக்ரம் தற்போது, கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் 15 முதல் தொடங்க இருக்கிறது.

விக்ரம் ஜோடியாக இப்படத்தில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாகவும் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரமின் `இருமுகன்’, படத்தை தயாரித்த தமீன்ஸ் பிலிம்ஸ் இப்படத்தையும் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தின் முதல் பாதி திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இரண்டாவது பாகத்தின் பெரும்பகுதி ராஜஸ்தான் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam