கேரளாவில் ஹிட் ஆகிய ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடும் மாணவிகள்..!! (அசத்தல் வீடியோ)

Read Time:3 Minute, 22 Second

maxresdefaultமலையாளப் பாடலான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ISC கல்லூரி மாணவிகள் நடனமாடும் காணொளி இணையத்தளங்களில் தற்பொழுது வைரலாகப் பரவி வருகின்றது.

கேரளாவின் மெகா ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வெளிபாடிண்டே புஸ்தகம். இந்த படத்தை விட இதில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடல் கேரளாவின் தற்போது ஹிட் ஆகியுள்ளது என்றே குறிப்பிடலாம்.

ஓனம் பண்டிகை அன்று கேரளாவின் ISC கல்லூரி மாணவிகள் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு உற்சாகத்துடன் நடனமாடும் காணொளி இணையத்தளங்களை குதூகலமாக அலங்கரிப்பதுடன், இளைஞர்களிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது.

பெண்மை, நளினம், வெட்கம், உதட்டை கடிப்பது, முந்தானை முனையை சுழற்றுவது, ஆண்களை கண்களால் கூறுபோடுவது என பெண்மைக்கான விஷயங்கள் இந்தப் பாடலில் நிரம்பிக் காணப்படுகின்றது.

பெண்மைக்கான அந்த நளினத்தோடு, வடிவுக்கு அரசியாக இருக்கும் பெண்கள் மீது ஆண்கள் தங்களை அறியாமலேயே ஈர்ப்புக் கொண்டுவிடுவார்கள். வடிவழகுடன் ஓர் பெண் தங்கள் முதுகுக்கு பின்னால் நடந்து சென்றாலும் கூட ஆண்களின் கேமரா கழுத்து 360 டிகிரியில் திரும்பி நோட்டம் விடும்.

அதற்கு ஏற்றது போல் இந்த நடனம் அமைந்துள்ளமையே இளைஞர்கள் மத்தியில் வரவேற்ப்பைப் பெற்றிருக்கு என்று கூறலாம். வெறும் கவர்ச்சிக்காக நடனம் ஆடுவதை இரசிக்கும் இளைஞர்களுக்கு இவ்வாறான நடனம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.

இந்த பாடலில் முதல் வரிசையில் நடனமாடும் ஷெர்லிக்கு தமிழகத்தில் பெரிய இணைய ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது.

நகைச்சுவை, சிரிப்புடன் கூடிய நளினத்துடன் அமைந்துள்ள ஷெர்லியின் நடனம், தமிழகத்தில் பெரிய ரசிகர்களை உருவாக்கிவிட்டது.

இதையடுத்து இளைஞர்கள் பலரும் அவரின் பேஸ்புக் கணக்கை தேடிக் கண்டுபிடித்து பாராட்டு மழையை பொய்ந்துவிட்டனர். தமிழக இளைஞர்கள் பலரும் குறித்த பெண்களின் நடனத்தை புகழ்ந்துள்ளனர்.
இந்த காணொளியை இதுவரை 20 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் யூடியூப்பில் பார்த்துள்ளனர். 70 சதவீதத்திற்கும் மேலான பார்வையாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இதைக்கண்ட தமிழ் பெண்கள் இதற்கு எதிர்வினையாக, ‘அவர்கள் ஒன்றும் அவ்வளவு அழகாக நடனமாடவில்லை என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post `இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த புதிய கவுரவம்..!!
Next post விஜய் ஆண்டனிக்கு ஜோடியான 4 நாயகிகள்..!!