தாய்ப்பால் – புட்டிப்பால் குழந்தைக்கு சிறந்தது எது?..!!

Read Time:4 Minute, 12 Second

201709080942550543_1_feeding._L_styvpfதாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் இவ்வுலகில் வேறு எந்த உணவிலும் இல்லை. தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல; தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்குப் பயன்படுகிறது.

‘தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை தொடர்ந்து கொடுத்து வந்தாலே, விட்டமின் மருந்துகள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. அந்தளவுக்கு அனைத்துச் சத்துக்களையும் கொண்டது இந்த உயிர்ப்பால். தாய்ப்பாலுக்கும், பால் பவுடர், பசும்பால் உள்ளிட்ட புட்டிப்பாலுக்கும் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்களைத் தெரிந்துகொண்டால், தாய்ப்பாலைத் தவிர, வேறு பாலை குழந்தைக்குக் கொடுக்க நினைக்கமாட்டோம்.

தாய்ப்பால் :

* தாய்ப்பால் ஓர் இயற்கை உணவு.
* இயற்கையான முதல் நோய்த் தடுப்பு மருந்து.
* தாய்ப்பால் அருந்துவதால், குழந்தை உடலின் வெப்பநிலை சரியான அளவில் வைக்கப்படும்.
* சோடியம் குறைவாக இருப்பதால், குழந்தையின் சிறுநீரகத்துக்கு நல்லது.
* வயிற்றுப்போக்கு, ஆஸ்துமா, ஒவ்வாமை, சருமநோய், காதில் சீழ் வடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கும்.

புட்டிப்பால் :

* பசும்பால் மற்றும் பவுடர் இரண்டும் செயற்கை உணவுகளே. தாய்ப்பால் தரவல்ல தரமும், சத்தும், பாதுகாப்பும் இதில் இருக்காது.

* பசும்பால் அல்லது பால் பவுடரை கொதிக்க வைத்து, பாட்டில் மற்றும் ரப்பரை சுத்தமாகக் கழுவி, வெதுவெதுப்பான சூடுநீரில் சுத்தப்படுத்தி, அதன் பிறகு டப்பாவில் பால் ஊற்றி குழந்தைக்குக் கொடுப்பது, என இந்தச் செய்முறைகளில் ஏதேனும் சுகாதாரக் குறைவு ஏற்பட்டால், அது குழந்தைக்கு நோயை உண்டாக்கும். மேலும், இவற்றை தயார் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரமும் அதிகம். அதற்குள், குழந்தையின் பசியும் அழுகையும் அதிகமாகி விடும்.

* புட்டிப்பால் குழந்தையின் செரிமானத்தைத் தாமதப்படுத்தும்.

* பால் பவுடர் டப்பாவின் காலாவதி தேதியைச் சரிபார்க்காமல் கொடுப்பதால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

சில பெண்கள், தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டு விடும் என்பதால் தாய்ப்பால் கொடுக்காமல், அல்லது குறுகிய காலத்திலேயே தாய்ப்பாலூட்டுவதை நிறுத்தி விடுவார்கள். சிலருக்கு அழகு பற்றிய எண்ணம் இருக்காது. ஆனால், தாய்ப்பால் கொடுக்க அலுப்பு, தூக்கத்தில் எழ சோம்பேறித்தனம் போன்ற காரணங்களால் குழந்தைக்கு பசும்பால் கொடுப்பார்கள்.

தாய்ப்பாலால் குழந்தைக்குக் கிடைக்கும் இணையற்ற நோய் எதிர்ப்பு சக்தி, சத்துக்கள், சீரான உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றைவிட, அழகும், அலுப்பும் முக்கியத்துவம் பெற்று விடுமா என்பதை ஒருகணம் சிந்தித்தால், குறைந்தது 6 மாதம், அதிகபட்சம் 1 வயதுவரை தங்கள் குழந்தைக்குப் பாலூட்ட தாய்மார்கள் உறுதியேற்று விடுவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் துணையை அலுப்படைய செய்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 5 அறிகுறிகள்..!!
Next post பிக் பாஸ் மூலம் வெளிவந்த கணேஷ் -ன் உண்மை முகம்…வெற்றிக்கு முதல் படியோ…???..!! (வீடியோ)