By 9 September 2017 0 Comments

மும்பை ரெயில் நிலையத்தில் குடிபோதையில் 3 வயது சிறுவனை கடத்திச் சென்ற வாலிபர்: வீடியோ..!!

201709091803044307_3-yr-old-boy-kidnapped-from-Vashi-railway-station_SECVPFமும்பையில் உள்ள வஷி ரெயில் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி 3 வயது சிறுவன் காணாமல் போனதாக குழந்தையின் பெற்றோர் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

இதையடுத்து ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் பதிவை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். அதில் குடிபோதையில் உள்ள இளைஞர் சிறுவனை தூக்கி கொண்டு பான்வெல் ரெயிலில் ஏறுவது தெரியவந்தது. அந்த இளைஞர் பச்சை-வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்தான். இந்த அடையாளத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த இளைஞர் அருகில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த ரகு நான் ஷிண்டே என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ரகு மீது போலீசார் குழந்தை கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் குழந்தை மீட்கப்படும் எனவும் போலீசார்.



Post a Comment

Protected by WP Anti Spam