விஷாலை உற்சாகப்படுத்திய தலைவன் வருகிறான்…!!

Read Time:3 Minute, 7 Second

201709101039318046_Vishal-encouraged-Vishal-anthem-team_SECVPFதென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாளுக்கு வெளியான விஷால் ஆன்தம் குழுவினரை சந்தித்து பாராட்டியுள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு “தலைவன் வருகிறான்” என்ற “விஷால் ஆன்தம்“ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. விஷாலின் அரசியல் வருகைக்கான முன்னறிவிப்பு தான் இந்த விஷால் ஆன்தம் என்றும் பேசப்பட்டது.

“நேசம் கொண்ட தலைவன் வந்தான்,
நெஞ்சே நிமிர்ந்து நில்லு,
நெருப்பைப் போல தீமை எரிக்கும்
நேர்மை இவன்தான் சொல்லு
வீரம் பாதி ஈரம் பாதி
வெல்லும் எங்கள் விஷால் நீதி…”

என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். இஷான் தேவ் இசையில் முருகன் மந்திரம், பாடல் வரிகளை எழுதி இருந்தார். நிகில் மேத்யூ, இஷான் தேவ் பாடி இருந்தனர். ஒளிப்பதிவு ஆனந்த், குணா, கார்த்திக். எடிட்டிங் ரமேஷ் யுவி. பி.ஆர்.ஓ. நிகில் முருகன்.

“விஷால் ஆன்தம்” குழுவினரை வரவழைத்து சந்தித்த விஷால், தன் மகிழ்ச்சியையும் பாராட்டையும் பகிர்ந்து கொண்டார். விஷால் ஆன்தம் குழுவினரிடம் விஷால் பேசுகையில், “நல்லாருந்துச்சு. ஆனா கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. நான் திரையுலகுக்கு ஆற்றி வரும் பணிகள் இதே உற்சாகத்தோடு தொடரும். இனி நான் எப்போதெல்லாம் இலேசாக சோர்வடைகிறேனோ அப்போதெல்லாம் இந்த பாடல் என்னை உற்சாகப்படுத்தி பணிபுரிய வைக்கும்.

இசையமைப்பாளர் இஷான் அருமையான பாடலை எனக்காக உருவாக்கியுள்ளார். அவருக்கும் இதைச்செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி”. என்றார்.

‘ஒரு திரைப்பட பாடலுக்கே உரிய கடின உழைப்பை இந்த பாடலுக்கு வழங்கிய பாடல் குழுவினரையே இந்த பாராட்டு சேரும்’ என்றார் இயக்குநர் க.ராஜீவ் காந்தி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழுப்பைக் குறைக்கும் கீரை விதைகள்…!!
Next post தீண்டல் இல்லாமல் எதுவுமே தித்திக்காது…. ஒரு ஆணின் தீண்டல் எப்படிப்பட்டது..?!!