முகமற்ற, கோரப்பற்கள் கொண்ட புதிய கடல் உயிரினம் கண்டுபிடிப்பு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 18 Second

201709151618468403_The-Fanged-Faceless-Sea-Creature-That-Washed-Ashore-During_SECVPFஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஹார்வே புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது கடலில் உயரமான அலைகள் ஏற்பட்டன. பல கடல் உயிரினங்கள் கரை ஒதுங்கின.

அதில் டெக்சாஸ் நகரத்தின் கலவெஸ்டான் பகுதியிலிருந்து 15 மைல் தொலைவில் விசித்திரமான உயிரினம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. முகவடிவமைப்பே இல்லாத இந்த உயிரினம் பயங்கர தோற்றத்துடனான பற்களை கொண்டுள்ளது.

அதைப் பார்க்கும் போது ஈல் என்று அழைக்கப்படும் மீன் போன்ற வடிவமைப்பு உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் அது திமிங்கலம் போன்ற உடலமைப்பை கொண்டுள்ளது.

இந்த உயிரினத்தின் படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்து அனைவரும் வியப்பில் உள்ளனர். மேலும் இது வேற்றுகிரகத்திலிருந்து வந்திருக்கலாம் எனவும் சிலர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்திரனில் தண்ணீர் உள்ளது: சந்திராயன்-1 ஆய்வின் மூலம் உறுதி..!!
Next post தாய்லாந்து காடுகளில் உருவாகும் ‘கும்கி-2’ படத்தில் நாயகியான ஜீவிதா மகள்..!!