மாரடைப்பைத் தடுக்கும் ஒவ்வாமை தடுப்பு மருந்து..!!

Read Time:2 Minute, 18 Second

201709161615434266_Allergie-drugs-to-avoid-Heart-attacks_SECVPFஒவ்வாமை தடுப்பு மருந்துகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கும் என 10 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க, கொழுப்பை குறைக்க பயன்படுத்தப்படும் மருந்துகளும், ரத்த அடர்த்திக்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டன.

இந்த ஆய்வில், மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் நோயாளிகளுக்கு மூன்று மாதத்துக்கு ஒரு முறை இந்த மருந்து வழங்கப்பட்டது.

40 நாடுகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மேலும், ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவரும் 4 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர்.

இந்த மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு மட்டும்தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து குறைந்தது என ஆய்வை நடத்தியவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதய நோய்களுக்கான ஐரோப்பிய அமைப்பின் முன் இந்த ஆய்வின் முடிவுகள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

ரத்தக் குழாய்களில் ஏற்படும் ஒவ்வாமைக்கும், மாரடைப்புக்கும் தொடர்புகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும், மனிதர்கள் மத்தியில் இது நிரூபிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வை முன்னின்று நடத்தியவரும், பிரிக்ஹாம் பெண்கள் மருத்துவமனையின் மருத்துவருமான பால் ரிட்கெர், இந்த ஆய்வு குறித்து, ‘இது ஒரு நீண்ட பயணத்தின் மைல்கல்’ என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்யின் `மெர்சல்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
Next post கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்..!!