தனது ஆசையை உம்மா கொடுத்து நிறைவேற்றிய சினேகன்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 44 Second

14_Ranjithஇன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று போட்டியாளர்களை சந்திக்கிறார் கமல் ஹாஸன்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை அகம் டிவி வழியாக பார்த்து பேசி வந்தார் கமல் ஹாஸன். இந்நிலையில் அவர் இன்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்கிறார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் போட்டியாளர்கள்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த கமல் ஹாஸனை கவிதை பாடி வரவேற்கிறார் சினேகன். கட்டிப்புடி வைத்தியம் சொல்லிக் கொடுத்த கமலுக்கே அந்த வைத்தியத்தை செய்து முத்தம் கொடுக்கிறார் சினேகன்.

நவீன யுகத்து நக்கீரனே வருக, என் பிக் பாஸ் குடும்பத்து பிரம்மாவே வருக வருக என்று கூறி கமல் ஹாஸன் தலையில் பெரிய ஐஸாக வைத்து விட்டார் சினேகன்.

உங்களிடம் தனியாக ஒரு 5 நிமிடங்கள் பேச வேண்டும் என்று ஹரிஷ் கல்யாண் கமலிடம் கூறுகிறார். கமலோ தனியாவா என்று கேட்டு ஹரிஷின் கன்னங்களை பிடித்து இழுக்கிறார்.

கமல் ஹாஸனுக்கு சினேகன் முத்தம் கொடுக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ ஆம்பளையை கூட விட்டு வைக்க மாட்டீர்களா கவிஞரே என்று கேட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயிரத்தில் இருவருக்கு விடிவு காலம் வந்தாச்சு..!!
Next post தாறுமாறாக வரும் விதி மதி உல்டா