நுரையீரல் பாதிப்புகளும், தடுக்கும் முறைகளும்..!!

Read Time:7 Minute, 42 Second

201709180820355246_Lung-damage-and-prevention_SECVPFஉயிர் மூச்சு, மூச்சுக்கு முன்னூறு தரம், மூச்சு முட்ட, மூச்சு பேச்சு என்பன மூச்சைப்பற்றி நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நம் உயிர் மூச்சின் சுவாசத்துக்கு காரணமான நுரையீரல் பாதிப்புகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நுரையீரல், நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராணவாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாயுவை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணி. மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நுரையீரலைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளாதவை நிறைய உண்டு. இதுகுறித்து மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (நெஞ்சகநோய்) எம்.ராமச்சந்திரன் கூறியதாவது:-

மூச்சுக்குழாய், மார்பு பகுதியில் 2-ஆக பிரிந்து நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் 3 பாகமாகவும், இடது நுரையீரல் 2 பிரிவாகவும் உள்ளது. 2-ஆக பிரியும் மூச்சுக்குழாய்கள் பல நுண்கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்று பைகளாக அமைந்துள்ளன. அவை மென்மையான தசைகளை கொண்டவை.

இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி, புதிய பிராண வாயுவை ஏற்றுக்கொண்டு சிறைகள் மூலமாக இதயத்துக்கு செல்கிறது.

இந்த நுண்ணிய பைகளில் தான் காற்று பரிமாற்றம் நிகழ்கிறது. சில நேரங்களில் நுண் பைகள் பாதிக்கப்படும்போது, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையும் பாதிக்கப்படுகிறது. மூக்கின் உள்ளே இருக்கும் ரோமங்கள் தூசிகளை வடிகட்டும். அதையும் தாண்டி தூசி மூச்சுக்குழலுக்குள் சென்றால் இருமல், தும்மல் ஏற்பட்டு தூசி வெளியேற்றப்படுகிறது.

நுரையீரலை சுற்றி வெளி படலம், உள்படலம் என 2 உறைகள் உள்ளன. இவற்றுக்கு இடையே ஒரு இடம் உண்டு. அதற்குள் இருக்கும் ‘ஃப்ளூரல்‘ திரவம், சுவாசத்தின்போது நுரையீரல்களின் அசைவினால் ஏற்படும் உராய்வை தடுக்கிறது.

மூளையில் உள்ள முகுளப்பகுதி தான் சுவாசத்தை நிமிடத்துக்கு 18 முதல் 20 வரை என சீராக வைக்கிறது. நாம், ஒரு நாளைக்கு சராசரியாக மூச்சுக்காற்றை 22 ஆயிரம் முறை உள்ளே இழுத்து விடுகிறோம். அவ்வாறு உள்ளே இழுத்து வெளியேவிடும் காற்றின் அளவு, சராசரியாக 9 ஆயிரம் கன அடி ஆகும்.

நுரையீரலில் 6 லிட்டர் காற்றை நிரப்பலாம். மூச்சுக் காற்றை இழுத்து விடும்போது 5 லிட்டர் காற்று வெளியேறும். ஒரு லிட்டர் காற்று நுரையீரலுக்கு உள்ளேயே இருக்கும்.

மனிதனின் மிக முக்கியமான உள்உறுப்பான நுரையீரலுக்கு, புகையிலை, முக்கிய எதிரி. புகை பிடிக்கும்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் நுரையீரலுக்குள் செல்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது. அதுமட்டுமின்றி அடுப்பின் புகை, காற்றின் மாசு ஆகியவை ஆஸ்துமா மற்றும் சுவாசக்குழாய் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளின் உண்ணி, அறையில் வாசம் வீச தெளிக்கும் வாசனை திரவியம், மெழுகுவர்த்தி புகை போன்றவையும் தீங்கு விளைவிக்கிறது.

ஒரு வாரத்துக்கு மேல் இருமல் இருந்தாலும், சுவாசிப்பதில் பிரச்சினை இருத்தல், உடற்பயிற்சி செய்யாதபோதும், மூச்சுவிட சிரமமாக இருத்தல் போன்றவை நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உண்பது நல்லது. காய்கறிகள், வைட்டமின்-சி நிறைந்த ஸ்ட்ராபெரி, கிவி, ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை உண்பது சுவாச மண்டலத்தை பாதுகாக்கும். அதேபோல் மீன் உணவு, மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலம், நுரையீரலின் தசைகள் வீக்கமடையும் பிரச்சினைகளில் இருந்து காக்கிறது.

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கிறது. அதேபோல் மூச்சுக்காற்றை உள்ளே இழுத்துவிடும் சுவாசப்பயிற்சி, நச்சை வெளியேற்றும். சுவாச பாதையை சுத்தப்படுத்தும். உடலுக்கு அதிகமான பிராணவாயு கிடைக்க வழிவகை செய்யும். நுரையீரலின் செயல்திறனை நன்கு வைத்திருக்க உதவும். நுரையீரலை பலப்படுத்தும். குறிப்பாக மன அழுத்தத்தை குறைக்கும்.

“பிராங்கோஸ்கோபி“ எனும் பெயர் கொண்ட கருவி, நுரையீரல் பாதிப்புகளை நீக்கும் அதிநவீன சாதனம். இந்த கருவியின் துணை கொண்டு பாதிப்புகளை கண்டறியலாம். நுரையீரலின் உள்நோய்கள் மற்றும் புற்றுநோயின் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம். சளியை பிரித்து எடுக்கலாம். கட்டிகளை கண்டறிய மாதிரி எடுக்கலாம். குரல்நாணின் பிரச்சினைகளை கண்டறிவது உள்பட பல சிகிச்சைகளை அளிக்கலாம்.

பஞ்சாலை, கட்டுமானம், ரசாயனம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மாசு, தூசு, புகை நிறைந்த இடங்களில் வேலை செய்பவர்கள் பணி நேரத்தில் தகுந்த பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொள்ள வேண்டும். நுரையீரல் பாதிக்காத வகையில் நாம் உடல் ஆரோக்கியத்தை பேணுவது நல்லது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் சீசன் 2 ல் இந்த பிரபலங்கள் தான் கலந்துகொள்ள போகிறார்களா? போட்டோ உள்ளே..!!
Next post சாரதி இல்லாமல் இயங்கும் வாகனம்..தொழில்நுட்பத்திற்கு எத்தனை கோடி செலவு தெரியுமா?..!! (வீடியோ)