By 19 September 2017 0 Comments

தன்னை அவதூறாக பேசிய காயத்ரி ரகுராம்… தயாராக இருங்க!.. சுஜாவின் அனல் பறக்கும் காட்சி..!! (வீடியோ)

625.0.560.350.160.300.053.800.668.160.90பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுஜா வருணி குறித்து சினேகனிடம் அவதூறாக பேசியதை நேருக்கு நேர் பேச காயத்ரி தயாராக இருக்கும்படி சுஜா சவால் விடுத்தது போன்ற வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாள் முதல் காயத்ரி பேசிய பேச்சுகள் மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியிருந்தது.இதனால் அவர் வெளியே வரும் பொழுது கமல் வேண்டுகோள் விடுத்ததால் அவரை நெட்டிசன்கள் சற்று மரியாதையாக வைத்துள்ளனர்.

புதிய போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த சுஜா வருணியை கட்டி அணைத்து வரவேற்றார் காயத்ரி. ஆனால் அடுத்த கணமே அவரது சுயரூபத்தை சினேகனிடம் காண்பித்தார். சுஜா வருணி ஒரு கலீஜ் என்றும் 6 மடங்கு ஜூலிக்கு சமமானவர் என்றும் தெரிவித்திருத்தார்.

பெண்களை கண்டபடி பேசக் கூடாது என்று கூறிவிட்டு பெண்களான ஓவியாவையும் சுஜாவையும் கண்டபடி பேசினார். காயத்ரி பேசியது குறித்து வருணி, சினேகன் மூலம் அறிந்து கொண்டார். இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் காட்டப்படவுள்ளதாக ஒரு ப்ரோமோ காட்டப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இந்த ப்ரமோ மிஸ்ஸாகிவிட்டது. அது இப்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சுஜா கமெரா முன் பேசுகையில், காய்தரி ரகுராம் உங்களிடம் நான் ஒன்று கேட்க வேண்டும். கலீஜ்ன்னா என்ன. எந்த அர்த்தத்தில் அந்த வார்த்தையை கூறினீர்கள். அந்த வார்த்தை என்னை தொந்தரவு செய்கிறது. உங்களுக்கு எப்படி தமிழில் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதோ. அதேபோல் எனக்கும் சில வார்த்தைகள் தெரியாது.

எனவே நீங்கள் விளக்கத்தான் வேண்டும். 100 நாள்கள் கழித்து உங்களை சந்திக்க வருகிறேன். தயாராக இருங்கள் என்று காயத்ரியின் கழுத்தில் துண்டு போட்டு கேட்கும் அளவுக்கு வருணி சென்றுவிட்டார்.



Post a Comment

Protected by WP Anti Spam