தீரன் அதிகாரம் ஒன்று டீசர், டிரைலர், படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Read Time:1 Minute, 28 Second

201709182218460578_Theeran-Adhigaaram-Ondru-release-date-announced_SECVPFகார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினத்தில் விஜய்யின் ‘மெர்சல்’ படமும் வெளியாக இருக்கிறது.

மேலும் பல படங்கள் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், நவம்பர் 17-ம் தேதி ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 27-ம் தேதி டீசர், அக்டோபர் 17-ம் தேதி டிரெய்லர், நவம்பர் 17-ம் தேதி பட வெளியீடு என்று ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு அறிவித்துள்ளது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘பந்தை’ விளையாட தயாராகும் உயர்நீதிமன்றம்..!! (கட்டுரை)
Next post புதைக்கப்பட்ட ஒருவரைத் தோண்ட முயற்சி செய்த பூனை..! நெகிழ வைக்கும் வீடியோ..!!