விஜய்யின் மெர்சல் படத்தில் ஸ்பேஸ் திரில்லர்..!!

Read Time:1 Minute, 52 Second

201709201633088307_Space-thriller-movie-joins-with-Vijay-mersal-film_SECVPFவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. இப்படம் திரையிடம் தியேட்டர்களில் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘டிக்டிக்டிக்’ படத்தின் டீசர், டிரைலர்கள் ஒளிபரப்ப இருக்கிறார்கள். ‘மிருதன்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் ஜெயம் ரவியை வைத்து தற்போது ‘டிக்டிக்டிக்’ படத்தை உருவாக்கி வருகிறார்.

இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகி இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர், டிரைலர்கள் வெளியாக இருக்கிறது.

விஜய்யின் ‘மெர்சல்’ படத்துடன் ஜெயம் ரவியின் ‘டிக்டிக்டிக்’ படத்தின் டீசர், டிரைலர் வெளியாக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படி ஒரு சண்டையை நீங்க பார்த்தே இருக்க மாட்டிங்க..!! (வீடியோ)
Next post டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது எப்படி?..!!