ஆரோக்கியமான செக்ஸ் ஆண்களின் ஆயுளை அதிகரிக்குமா?..!!

Read Time:4 Minute, 37 Second

14_04_2016_12_47_08Cabaret_movie_Richa_Chadda_and_Gulshan_Devaiya_sexy_wallpapers-350x168தமது பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கண்டுபிடித்திருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க ஆய்வாளர்கள் செய்த பரிசோதனைகளின் முடிவில், பாலியல் இச்சை தூண்டப்பட்டு, ஆனால் பாலியல் கலவியில் ஈடுபடமுடியாமல்போன ஆண் ஈக்களின் ஆயுள்காலம் 40 சதவீதம் குறைவதாக தெரியவந்திருக்கிறது.

மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆப் சயன்ஸ் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக வீடுகளில் காணப்படும் வீட்டு ஈக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, விஞ்ஞானிகள் பெண் ஈக்களின் ஹார்மோன்களை செயற்கையாக ஆண் ஈக்கள் மத்தியில் பரவச்செய்தனர். அந்த ஹார்மோன்களால் தூண்டப்பட்ட ஆண் ஈக்கள் கலவிக்காக முயன்றபோது அவற்றின் அருகே பெண் ஈக்கள் இல்லாமையால் அவற்றால் கலவியில் ஈடுபட முடியவில்லை. இதனால் அந்த ஆண் ஈக்களிடம் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகரித்ததையும் இந்த ஆய்வாளர்கள் அதற்கான பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்தனர்.

இப்படி தொடர்ந்து மன அழுத்தம் அதிகரித்த ஆண் ஈக்கள், கலவியில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட மற்ற ஆண் ஈக்களைவிட விரைவாக இறந்து போயின.

இதில் கலவியில் ஈடுபட்ட சாதாரண ஆண் ஈக்களுடன் ஒப்பிடும்போது, கலவியில் ஈடுபட அனுமதிக்கப்படாத ஆண் ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 40 சதவீதம் குறைவதை கவனித்த இந்த ஆய்வாளர்கள், ஆண் ஈக்களின் ஆரோக்கியமான நீடித்த ஆயுளுக்கும் அவற்றின் பாலியல் திருப்திக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

“செக்ஸில் ஈடுபடாத ஆண் ஈக்களின் ஆயுள் குறைவதாக கூறும் ஆய்வின் முடிவு ஆண்களுக்கும் பொருந்தும்”
ஈக்கள் மட்டுமல்ல, புழுக்கள் மத்தியில் செய்யப்பட்ட வேறொரு ஆய்விலும், அவற்றின் ஆயுள்காலத்திற்கும் அவற்றின் பாலியல் செயற்பாட்டு திருப்திக்கும் தொடர்பு இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறாரகள்.
ஈக்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இது பொருந்தும்!

இந்த இரு ஆய்வு முடிவுகளும் ஒரு சேர பார்க்கப்படவேண்டும் என்று கூறும் விஞ்ஞானிகள், விலங்குகளின் ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, ஆயுளிலும் அவற்றின் பாலியல் செயற்பாடும், அதில் அவற்றுக்கு கிடைக்கும் நிறைவும் நேரடியான பங்கு வகிக்கிறது என்பதை இந்த ஆய்வுகள் மீண்டும் உறுதி செய்திருப்பதாக தெரிவிக்கிறார்கள்.

அதேசமயம், ஆண் ஈக்களின் ஆயுளை பாதிக்கும் இந்த பாலியல் கலவியால் கிடைக்கும் திருப்தி என்பது மனிதர்களுக்கும் அப்படியே பொருந்தும் என்கிறார் சென்னையிலுள்ள பிரபல பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.
ஆரோக்கியமான பாலியல் உறவும், அதன் மூலம் ஆண்களுக்கு கிடைக்கும் உடல்ரீதியான மற்றும் உளரீதியிலான திருப்தியும் சேர்ந்து ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், அது அவர்களின் ஆயுளை நீட்டிப்பதாகவும், இதற்கான மருத்துவ காரணிகள் அறிவியல் ரீதியிலான ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார் நாராயண ரெட்டி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலுக்கு கண் இல்லை.. உண்மைதான், வீடியோ பாருங்க புரியும்..!! (வீடியோ)
Next post ஹேர் கலரிங் கூந்தலில் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமா?..!!