இயற்கையின் அதிசயம்: சீனாவில் கல் முட்டையிடும் குன்று..!!

Read Time:2 Minute, 46 Second

2-3சீனாவில் உள்ள குன்று ஒன்றை ”முட்டையிடும் மலை” என மக்கள் அழைக்கின்றார்கள்.

சீனாவின் கைஸொவ் மாகாணத்தில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகக் கூறப்படுகிறது.

9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட சமதளமற்ற குன்றில் டசன் கணக்கில் கோள வடிவ முட்டைகள் வெவ்வேறு அளவுகளில் உருவாகியிருக்கின்றன.
குன்றுக்கு அருகில் இருக்கும் குலு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த மலை நன்றாக சாப்பிட்டு, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாகச் சொல்கிறார்கள்.

இந்த விசித்திரமான முட்டை இடும் மலையை ஆய்வு செய்வதற்குப் புவியியலாளர்கள் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கிறது.

நகரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து, ஒதுக்குப்புறமான குன்றை அடைய வேண்டும். குன்று கடினமான பாறைகளால் ஆனது. முட்டைகள் சுண்ணாம்புப் பாறைகளால் ஆனவை. எல்லா முட்டைகளும் ஒரே விதமான பாறையால் உருவாகவில்லை. இதுவரை இந்தக் குன்றிலிருந்து ஏன் முட்டை வடிவப் பாறைகள் உருவாகின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

இன்னும் சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கல் முட்டைகள் எப்படி உருவாகின்றன என்று தெரியவரலாம் என்கிறார்கள்.

பல தலைமுறைகளாக இந்தக் குன்று முட்டைகளை இடுவது குறித்து குலு கிராம மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

அவர்கள் அடிக்கடி குன்றுக்கு வந்து, முட்டைகளைத் தொட்டு வணங்குகிறார்கள். ‘கடவுள் முட்டைகள்’ என்றும் ’அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்’ என்றும் மக்கள் நம்புகின்றார்கள்.

கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் குறைந்தது ஒரு கல் முட்டையையாவது வைத்திருக்கின்றன. மற்ற கிராமங்களில் இருந்தும் முட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள். சமீபத்தில் இந்தக் குன்று பிரபல சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாதாரண அரிசியை விட சிவப்பு அரிசி தான் பெஸ்ட்..!!
Next post இவ்வளவு சின்ன வயதில் இப்படி ஒரு பாசகார அண்ணன்னை பார்த்து இருக்க மாட்டிங்க..!! (வீடியோ)