செரிமானம், வயிற்று கோளாறுகளை நீக்கும் சாத்துகுடி..!!

Read Time:5 Minute, 2 Second

201709230844586954_digestive-and-stomach-problems-control-Mosambi-Juice_SECVPFஎல்லா பருவக்காலங்களிலும் கிடைக்கின்ற பழம் தான் சாத்துகுடி. சாத்துகுடி என்றவாறு தமிழில் அழைக்கப்படுவதற்கு ஏற்ப அதன் சாற்றை குடிப்பதற்கு அனைவரும் விரும்புவர். அந்தளவிற்கு பழச்சாறு என்றதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சாத்துகுடி ஜூஸ்தான். சாத்துக்குடியின் தோற்றம் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாதான் என அறியப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அன்டைநாடுகளிலும் சாத்துகுடி ஜூஸ் கடைகள் வீதிகள் தோறும் விற்பனை செய்யப்படும். வெப்பம் நிறைந்த பகுதிகளில் குளிர்ச்சியை தரும் பழமாக சாத்துகுடி முதலிடம் பிடிக்கிறது.

இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இதன் பெயர் மொசம்பி என்று அழைக்கப்படுகிறது. தென் இந்தியாவிலும் கேரளா மற்றும கனடாவில் மொசம்பி எனவும், ஆந்திராவில் பதாயி என்றும் தமிழகத்தில் சாத்துகுடி என்றும் பெயர் பெற்றுள்ளது. ஸ்வீட் லெமன் என்பதும் சாத்துகுடியின் ஒரு பெயர்தான். ஒரு பெரிய எலுமிச்சை போன்று இனிப்புடன் திகழ்வதால் ஆங்கிலேயர் ஸ்வீட் லெமன் என்று அழைக்கின்றனர்.

எப்படி அழைத்தாலும் சாத்துகுடி பசுமையுடன் காட்சியளித்து அருந்துபவர்க்கு ஆரோக்கிய செழுமையை தருகிறது.

சாத்துகுடி பழத்தில் அபரிதமான விட்டமின்-சி சத்து நிறைந்துள்ளது. உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. நார்சத்து சாத்துகுடியில் நிறைந்துள்ளது. சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்கவும் உதவுகின்றது. எலும்புகளுக்கு வலுவூட்டுவதுடன், வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது. சாத்துகுடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினம் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும்.

டலில் புதிய இரத்தம் விருத்தியாக தினம் இரண்டு சாத்துகுடி பழச்சாறு அருந்த வேண்டும். உடல் அசதி போகும். அதனால் தான் நோயுற்றவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த தரப்படுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் சாத்துகுடி சிறப்புற செயல்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்களும் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்தலாம்.

குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் வலுவிற்கும் இன்றியமையாதது கால்சியம் சத்து. எனவே குழந்தைகள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்த நல்ல வளர்ச்சி பெறுவர். பெரியவர்கள் மற்றும் பெண்களின் எலும்பு தேய்மானம் மற்றும் வலுவற்ற எலும்பிற்கு வலு சேர்க்க சாத்துகுடி ஜூஸ் சிறந்த பலனை தரும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது. நமது ஞாபகதிறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பசி எடுக்கவில்லை என்பவர்க்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாய் சாத்துக்குடி உள்ளது.

சாதாரணமாய் சாத்துகுடி பழமா? என்று கேட்கும் பலருக்கும் அதன் பெருமை தெரியவில்லை. சாத்துகுடி சத்துகள் நிறைந்து சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திழ்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல பாடகி பலாத்காரம், நடிகர் கைது..!!
Next post தாயுடன் சிறை வாசம் அனுபவிக்கும் குழந்தை கண்கலங்க வைக்கும் சம்பவம்.!!