By 24 September 2017 0 Comments

மிகவும் ஆபத்தான உடலுறவு நிலைகள்..!!

admin-panel-image-52595e71-7dcc-403b-a4d7-9da6c77384b0-1506064183685-350x230உடலுறவு என்பது கணவன் மனைவி உறவின் ஒரு அங்கம் என்றே சொல்லலாம். இது அனைவரும் பேச தயங்க கூடிய ஒரு விஷயம் கூட. இதைப் பற்றி வெளிப்படையாக பேசுபவர்கள் மிகவும் குறைவே. உடலுறவில் தம்பதிகள் வேடிக்கையான வழிகளிலும், சில பாதுகாப்பான வழிகளிலும் ஈடுபடுகிறார்கள். அதன் மீது இருக்கும் ஆர்வத்தில் பல உடலுறவு நிலைகளை முயற்சிக்கிறார்கள். இவற்றால் சில நேரங்களில் சில உடலுறவு நிலைகள் ஆபத்தில் போய் முடிகின்றன.

உதாரணமாக, மனைவின் அந்தரங்க உறுப்பில் தலையை விட்டு மாட்டிக் கொண்ட கணவர். இது சமீபத்தில் உண்மையில் நடந்த சம்பவம். புதிதாய் முயற்சி செய்வதாய் நினைத்து இது போல் எதையாவது செய்து பிரச்சனையில் மாட்டி கொள்கிறார்கள். இங்கு மிகவும் ஆபத்தான உடலுறவு நிலைகளை பற்றி பார்க்கலாம்.

நீங்கள் உடலுறவின் போது கருத்தடை சாதனங்கள் உபயோகித்தாலும், உபயோகிக்கவில்லை என்றாலும் சில உடலுறவு நிலைகள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இது தற்போதைய விஞ்ஞான ஆராய்ச்சியில் பல அறிவியலாளர்களால் கூறப்படுவது. அப்படி என்ன ஆபத்து ஏற்பட்டு விடும் என்று நீங்கள் கேட்கலாம். சில உடலுறவு நிலைகளால் ஆணின் பிறப்புறுப்பு முறிவு ஏற்படும். இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால், நாய் போன்ற உடலுறவு நிலையில் 41% ஆணுறுப்பு முறிவு ஏற்படுவதாகவும், மற்றவற்றை விட இது முன்னிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் ஏற்படும் வெப்பம் மற்றும் அதிக ஆர்வத்தின் காரணமாக, ஆணுறுப்பு முறிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது உங்களுக்கு அதிர்ச்சி மற்றும் அதிக வலியை ஏற்படுத்தும். உண்மையில் பெரும்பாலானோர் கருதுவது, ஆண்குறியில் இருக்கும் எலும்பில் முறிவு ஏற்படும் என்பது. ஆனால் அது தவறான கருத்து. பெரும்பாலும் பெண்களின் இடுப்பை பற்றி கொண்டு தீவிரமாக தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, இந்த முறிவு ஏற்படுகிறது.

18 முதல் 66 வயதிற்கு இடையில் இருக்கும் 90 ஆண்கள் இந்த ஆணுறுப்பு முறிவால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன் படி சுய இன்பம் காணுதல் அல்லது ஆண்குறி கையாளுதல், மிஷனரி நிலை (பெண்ணின் மேல் ஆண்கள் இருக்கும் நிலை), நாய் போன்ற நிலை, ஆணின் மீது பெண் இருக்கும் படியான நிலை போன்ற வித்தியாசமான உடலுறவு நிலைகள் மற்றும் இயக்க நிலைகளால் காயங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஆபத்தான உடலுறவு நிலையில் மிஷனரி நிலை இரண்டாம் இடத்தில் உள்ளது. இது தொடுதல் மற்றும் சுற்றுதல் போன்ற காம சூத்ர நிலைகளை விட சிக்கலானது அல்ல. ஆனாலும், இது மிகவும் ஆபத்தான நிலை என்பதால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடலுறவின் போது பெண்கள் மேலிருப்பதை காட்டிலும், நாய் போன்ற நிலை மற்றும் மிஷினரி நிலைகளிலேயே ஆணுறுப்பில் இருக்கும் கார்பஸ் காவேர்னோரம் முறிவு மற்றும் சிறுநீர் குழாயில் புண் போன்றவை அதிக அளவில் ஏற்படுவதாக கூறுகிறது ஆராய்ச்சி.

உடலுறவின் போது பெண்கள் மேலிருக்கும் நிலை, மூன்றாவது ஆபத்தான இடத்தை பிடித்திருக்கிறது. நாய் போன்ற நிலையிலும், ஆண்கள் மேலிருக்கும் நிலையிலும் ஆணுறுப்பு முறிவிற்கான தீவிரத்தை நாம் அறிவதில்லை. ஆனால் பெண்கள் மேலிருக்கும் நிலையை விட நாய் போன்ற நிலையில் மிகவும் ஆபத்துகள் அதிகம்.



Post a Comment

Protected by WP Anti Spam