உலகில் முதன் முறையாக பல் அறுவை சிகிச்சை செய்த சீன ரோபோ..!!

Read Time:2 Minute, 30 Second

201709241053038845_chinese-Robot-Performed-Unaided-Dental-Surgery-on-a-Human_SECVPFசீனாவில் பல் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் 40 கோடி மக்கள் புதிய பற்களுக்காக காத்திருப்பது தெரியவந்தது.

ஆனால் அதற்கு தகுந்தாற் போல் பல் டாக்டர்கள் இல்லை. மிக குறைவாக உள்ளனர். எனவே பல் மருத்துவ துறையில் ‘ரோபோ’க்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அதற்காக ஸியான் நகரில் உள்ள ராணுவ மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரி, பெய்ஜிங்கில் செயல்படும் பெய்காங் பல்கலைக்கழகத்தின் ‘ரோபோ’ நிறுவனம் இணைந்து ‘பல் மருத்துவ ரோபோ’வை உருவாக்கினார்கள்.

அந்த ‘ரோபோ’ ஷான்ஸி மாகாணத்தின் ‘ஸியான்’ நகர ஆஸ்பத்திரியில் நேற்று ஒரு பெண்ணுக்கு பல் ஆபரேசன் (அறுவை சிகிச்சை) செய்தது

அப்போது அந்த பெண்ணுக்கு புதிதாக 2 செயற்கை பற்களை பொருத்தியது. இந்த அறுவை சிகிச்சையின் போது ‘ரோபோ’வுடன் டாக்டர்களும் உடன் இருந்தனர். பற்களை ‘ரோபோ’ சரியாக பொருத்தியது. 0.2 முதல் 0.3 மி.மீட்டர் மட்டுமே மிக சிறு தவறு நடந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு பல் டாக்டர்கள் நோயாளிகளுக்குரிய கருவிகளை பொருத்தினர். அறுவை சிகிச்சைக்குரிய திட்ட செயல்பாடுகள் ‘ரோபோ’வில் பதிவு செய்யப்பட்டது.

அதன்படி ‘ரோபோ’ பல் அறுவை சிகிச்சை செய்து புதிய பற்களை பொருத்தி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகில் பல் அறுவை சிகிச்சை செய்த முதல் ‘ரோபோ’ என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

இதற்கு முன்பு பற்களில் ரூட் கேனால் ஆபரேஷன் மற்றும் பல் தாடை எலும்பு ஆபரேஷனில் மட்டுமே ‘ரோபோ’க்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது பல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்தநாளில் இணையத்தை கலக்கிய துருவ் விக்ரம்…!!
Next post ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும்..!! (கட்டுரை)