கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்து..!! (வீடியோ)
இத்தாலியில் விமான கண்காட்சியின்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட ராணுவ விமானம் ஒன்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரோமை நகரின் தென் பகுதியில் அமைந்துள்ள Terrancia கடற்பகுதியில் விழுந்துள்ளது. இந்த கோர சம்பவத்தை ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர்.
குறித்த விமானத்தை இயக்கிய விமானி Gabriele Orlandi, விமானம் கட்டுப்பாட்டை இழந்து வானில் இருந்து அசுர வேகத்தில் தரையில் விழும் நிலையில், அவரால் வெளியேற முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குறித்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவத்தினர், விபத்து நடந்து ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் விமானியின் உடலை மீட்டுள்ளனர்.
Average Rating