அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆன்டிரோட்டிக்கை வீழ்த்தி ரோஜர் பெடரர் சாம்பியன்

Read Time:2 Minute, 37 Second

Tennis.Federer.USopen.jpg.jpgகிராண்ட் சிலாம் பட்டங்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், அமெரிக்க வீரர் ஆன்டி ரோட் டிக்கும் மோதினார்கள். போட்டியின் தொடக்கம் முதலே ரோஜர் பெடரர் ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதின் மூலம் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

ஆனால் அடுத்த சுற்றில் ஆன்டிரோட்டிக் வெகுண்டு எழுந்தார். ஆவேசமாக ஆடி 6-4 என்ற கணக்கில் அந்த செட்டை ஆன்டிரோட்டிக் கைப்பற்றினார்.

இருந்தாலும் மீண்டும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஜர் பெடரர் ஆடுத்த 2 செட்டுகளையும் 7-5, 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் ரோஜர் பெடரர் 6-2, 4-6, 7-5, 6-1 என்ற செட்டுகளில் வெற்றி பெற்றார். அவருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

ரோஜர் பெடரர் தொடர்ந்து 3-வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வேறு எந்த வீரரும் தொடர்ந்து 3 முறை கைப்பற்றியது இல்லை.

இது ரோஜர் பெடரருக்கு கிடைத்த 9-வது கிராண்ட் சிலாம் பட்டம் ஆகும். இதன் மூலம் அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற 5 வீரர்களில் ஒருவராக ரோஜர் பெடரர் உள்ளார். பீட் சாம்பிராஸ் 14 பட்டங்களை வென்று முதலிடத்தில் உள்ளார்.

ரோஜர் பெடரர் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தையும் வென்று இருக்கிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

பெண்கள் இரட்டையர் இறுதி போட்டியில் நாதலி டெசி(பிரான்சு), வெரா சுவனரேவா(ரஷியா) ஜோடி டேனிரா-காதரினா ஜோடியை 7-6, 7-5 என்ற நேர் செட்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
Tennis.Federer.USopen.jpg.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சூர்யா-ஜோதிகா திருமணம் நடந்தது
Next post யாழ்ப்பாணம் அருகே மீண்டும் கடும் போர்…