சீனாவில் பிரமாண்டமாக ரிலீசாகும் ரஜினியின் `2.0’…!!

Read Time:1 Minute, 59 Second

201709251453084638_Rajinikanths-20-team-plans-huge-release-in-China_TMBVPF
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பல் உருவாகி வரும் `2.0′ படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளில் வெளியாவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி `2.0′ படம் சீன மொழியிலும் டப் செய்யப்பட்டு சீனாவில் சுமார் 15,000 திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

அக்டோபரில் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழாவும், நவம்பரில் டீசரும், டிசம்பரில் டிரைலரும் வெளியிடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியமான கூந்தலை பெறுவது எப்படி?…!!
Next post புதிய கொள்கையை கடைபிடிக்கும் இலியானா..!!