இந்த நாடுகளில் 24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதிக்குமாம்…!!

Read Time:3 Minute, 10 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90காலையில் சூரியன் உதிக்கும் மாலையில் மறைந்திடும். சூரியனைச் சுற்றியே எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன,அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம்.

ஆனால் உலகின் சில நாடுகளில் சூரியன் மறையாமல் 24 நான்கு மணி நேரமும் வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. இரவு ஏழு மணி அந்தி சாயும் நேரத்தில் கருமை படந்து பார்த்தே பழகிய நமக்கு பகல் பன்னிரெண்டு மணி போல சுரீரென்று வெயில் அடித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். எந்தெந்த நாடுகளில் இரவுகளில் சூரியன் தெரிகிறது தெரியுமா?

நார்வே

ஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது நார்வே. நடுஇரவு சூரியனுக்கு இந்த ஊர் ரொம்பவே பிரபலம். இங்கே இரவில் சூரியனைக் காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா சுமார் 100 ஆண்டுகள் முழுவதுமே சூரியனே தெரியாமல் இருட்டாகவே இருந்திருக்கிறது.

ஃபின்லாந்து :

ஆயிரம் ஏரிகளுடன் இயற்கை சூழல் நிரம்பிய இடம் இது. இங்கே கோடைக் கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு 73 நாட்கள் கழித்தே மறைகிறது. தொடர்ந்து 73 நாட்களும் சூரியனை நாம் பார்க்கமுடியும்.

அலஸ்கா பனிக்கட்டிகள் நிறைந்த இடம் இது. மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் இங்கே பகலாகத் தான் இருக்கும். இந்த காலத்தில் சூரியன் மறையாது.

ஐஸ்லாந்து

ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவு இது. மே முதல் தேதியில் இருந்து ஜூலை கடைசி தேதி வரையில் இங்கே சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைகாலங்களில் நடு இரவில் தான் சூரியன் மறையும் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு சூரியன் உதித்திடும்.

அதிக நாட்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இரண்டாவது இடம் வகிக்கிறது. இங்கே கோடைக்காலங்களில் 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும்.

ஸ்வீடன்

இங்கே குறிப்பிட்டுள்ள நாடுகளில் இங்கே கொஞ்சம் குளிர் குறைவு. இங்கே நடு இரவில் சூரியன் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதித்து விடும். மே முதல் ஆகஸ்ட் வரையில் இப்படித் தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் வேடத்தில் நடிக்க பயந்தேன் – ஸ்ரீபிரியங்கா…!!
Next post ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த திஷா பதானி…!!