நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பழக்க வழக்கங்கள்…!!

Read Time:2 Minute, 42 Second

201709251354315833_Some-habits-affect-our-health_SECVPFநாம் செய்யும் சில செயல்களில் கூட நமக்கு தீமைகள் உருவாகும் அபாயம் உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பழக்க வழக்கங்கள்
நாம் செய்யும் சில செயல்களில் கூட நமக்கு தீமைகள் உருவாகும் அபாயம் உள்ளது.

ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டே ஸ்நாக்ஸ் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்புகள் சேரும் மற்றும் சர்க்கரை வியாதிக்கும் வழிவகுக்கும். அதிகம் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள், இதனால் உங்கள் உடல் அசையாமல் இருக்கும், இது உங்களுக்கு சோர்வை ஏற்படுத்தி உடல் பருமனை அதிகரிக்கும்.

உடலில் ஏற்படும் வலிகளை போக்க கிடைக்கும் மாத்திரைகளை எல்லாம் விழுங்க கூடாது. இது ஒருவித போதை நிலைமையை உருவாக்கும். எந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்றாலும் மருத்துவரிடம் ஆலோசித்து பின்னரே உபயோகிக்க வேண்டும்.

குடி பழக்கத்தை கொண்டவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் இருப்பார்கள், அவர்கள் அதற்கு அடிமையாகி இருப்பார்கள், அவர்கள் குடி பழக்கத்தை விட வேண்டும், இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது, அதேப்போல் தான் புகை பிடிக்கும் பழக்கமும் இது முதலில் நுரையீரலை பாதிக்கும்.

சிறு விஷயங்களுக்கு கூட அதிகமான கோபம், மன அழுத்தம், எரிச்சல் உண்டாவதை குறைக்க வேண்டும், இதனால் இதயம் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். அதிக கோபம் அல்லது மன அழுத்தம் வரும் பொழுது உங்கள் சிந்தனையை மாற்றுங்கள், இது உங்கள் மன நிலையை மாற்றும்.

நீங்கள் உட்கொள்ளும் உணவுகளில் மிகுந்த கவனம் தேவை. எப்பொழுதும் வாயில் ஏதேனும் சுவைத்து கொண்டே இருக்க கூடாது, ஆரோக்கியம் உள்ள உணவுகளையே உட்கொள்ள வேண்டும். அதிகம் கொலஸ்ட்ரால் இருக்கும் உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீங்கள் டிவியில் பார்த்தது எல்லாமே உண்மையில்லை! சுஜா வருணி Exclusive Interview…!!(வீடியோ)
Next post ரைசா ஓவியாவை பற்றி கூறியது முற்றிலும் உண்மை! பிக்பாஸில் நடந்தது இதுதான்…!!( வீடியோ)