யாரையும் பின்பற்றாமல் எனது ஸ்டைலில் நடிப்பேன்: காஜல் அகர்வால்…!!

Read Time:2 Minute, 28 Second

201709271323417120_Will-act-in-my-style-says-Kajal-Aggarwal_SECVPF‘குயின்’ ரீமேக்கில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால் தான் கங்கனா ரணாவத்தை பின்பற்றாமல் தனது ஸ்டைலிலேயே நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான இந்தி படம் ‘குயின்’. வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் தேசிய விருது உள்பட 32 விருதுகளை குவித்தது.

‘குயின்’ படம் தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதுதவிர தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் தயாராகிறது. தமிழ், கன்னட படங்களை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதில் கங்கனா ரணாவத் பாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். தெலுங்கு ரீமேக்கில் தமன்னாவும், மலையாள ரீமேக்கில் மஞ்சிமா மோகனும் நடிக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் திருமணத்தை அவளுடைய வருங்கால கணவனே நிறுத்திவிடுகிறான். ஆனால் அந்த பெண் ஏற்கனவே திட்டமிட்டபடி தனது தேன்நிலவு சுற்றுலா பயணத்தை தொடர்கிறாள். விருதுநகரில் இருந்து பாரிஸ், லண்டன், பாரிசிலோனா ஆகிய நகரங்களுக்கு செல்கிறாள். அப்போது அவள் சந்திக்கும் அனுபவங்களே இந்த படம். இந்த படத்தின் தமிழ் வசனம், பாடல்களை தமிழச்சி தங்கபாண்டியன் எழுதுகிறார்.

இதில் நடிப்பது பற்றி கூறிய காஜல் அகர்வால்….

‘குயின்’ படத்தை நான் பல முறை பார்த்திருக்கிறேன். மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறேன். இந்த படம் ஒரு வலுவான கருத்தை சொல்கிறது. கங்கனா ரணாவத் ஏற்ற பாத்திரத்தில் நான் நடிப்பதால் அவரை காப்பி அடிக்கமாட்டேன். எனது ஸ்டைலில் தான் நடிப்பேன். யாரையும் பின்பற்றாமல் என் சொந்த பாதையிலேயே செல்வேன். எனது சினிமா பயணத்தில் இது முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலைப்பாம்பு வளர்த்தவர் பரிதாபமாக மரணம் : பிரித்தானியாவில் நிகழ்ந்த சோகம் ..!!
Next post அசைவம் சாப்பிடுவதை திடீரென நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…!!