சிவகார்த்திகேயன் வெளியிட்ட தாறுமாறா பாடல்…!!

Read Time:1 Minute, 49 Second

201709271612202492_Sivakarthikeyan-released-Tharumaaraa-Song_SECVPFரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் நடிப்பில் உருவாகி வரும் ‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ‘தாறுமாறா…’ என்ற பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

‘விதிமதி உல்டா’ படத்தில் இடம் பெற்ற ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘தாறுமாறா ஒரு பார்வை பார்த்தா.. ஏறுமாறா என்னை அடித்து தூக்க…’ என்ற பாடலின் வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நிமிட சிங்கள் டிராக் டீசராக வெளியிட்டார்.

இந்த பாடல் உலகம் முழுவதும் ஒளித்து வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த பாடலின் முழுமையான வீடியோ விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலில் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் இணைந்து ஆடி பாடி நடித்திருக்கிறார்கள்.

சூப்பர் ஹிட் பாடலை கொடுத்த இந்த படத்தின் இசையை, முன்னணி இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி அமைத்திருக்கிறார். கபிலன் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியிருக்கிறார். இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய விஜய் பாலாஜி இயக்கியுள்ளார்.

இதில் டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ‘விதிமதி உல்டா’ விரைவில் வெளியாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்தடுத்து இரு பேய் படங்களில் நடிக்கும் ஓவியா…!!
Next post உயிருக்கு போராடிய நண்பன்… செல்பி மோகத்தால் நிகழ்ந்த பரிதாபம்…!! (வீடியோ)