By 29 September 2017 0 Comments

மக்னீசியம் குறைபாட்டினால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகள்…!!

201709270827569209_biggest-effects-of-magnesium-deficiency_SECVPFமக்னீஷியம் அதிகமாக மருத்துவம் மற்றும் சத்துணவு உலகில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. காரணம் இந்த சத்து குறைவு அதிகமாக மக்களிடம் காணப்படுகின்றது.

மக்னீசியம் குறைபாட்டினால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகள்
இன்று மக்னீஷியம் அதிகமாக மருத்துவம் மற்றும் சத்துணவு உலகில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. காரணம் இந்த சத்து குறைவு அதிகமாக மக்களிடம் காணப்படுகின்றது.

மக்னீஷியம் என்ற தாது உப்பு நம் உடலில் காணப்படும் ஒன்று. சுமார் 25 கி மக்னீஷியம் ஒவ்வொருவரது உடலிலும் காணப்படுகின்றது. இதில் பாதி அளவு நமது எலும்புகளில் இருக்கின்றது. 1 சதவீதம் நம் ரத்தத்தில் உள்ளது. மக்னீஷியம் 300 ரசாயன மாற்றங்களைச் செய்து உடல் செயல்பாட்டினை இயக்குகின்றது.
மக்னீஷியமானது

* கால்ஷியம், வைட்டமின் டி, கே, சிலிகா இவற்றினை எடுத்துக் கொள்ள உதவுகின்றது.
* சதை, எலும்புகளை சுறுசுறுப் பாக்குகின்றது.
* உடலில் சக்தியினை உருவாக்குகின்றது.

* உடலில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.
* கார்ப்போஹைடிரேட், புரத, கொழுப்பு செரிமானத்திற்கு உதவுகின்றது.
* டி.என்.ஏ. ஆர்.என்.ஏ. உருவாக்கத்திற்கு உதவுகின்றது. * செரடோனின் போன்ற ரசாயன உற்பத்திக்கு உதவுகின்றது. மக்னீசியம் குறைபாடு இருந்தால்.

* பசியின்மை * வயிற்றுப் பிரட்டல் * வாந்தி *சோர்வு, தளர்வு * மரத்து மோதல் * சதை பிடிப்பு * வலிப்பு * செயல்பாடுகளில் மாறுதல் * இருதய முறையற்ற துடிப்பு * இருதய வலி * உயர் ரத்த அழுத்தம் * ரத்தம் கட்டி படுதல் ஆகியவை ஏற்படும்.

இன்றைய விவசாயங்களில் அதிக செயற்கை ரசாயன உரங்களும், பூச்சி கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுவதே மண்ணில் தாது வளங்கள் குறைந்து மக்னீசியம் குறைபாடு ஏற்படுத்துகின்றது. சில மருந்துகளும் இத்தகு குறைபாட்டினை ஏற்படுத்துகின்றன.

மக்னீசியம் குறைபாட்டினால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகள்:

* சிறுநீரக பாதிப்பு * ஜீரண கோளாறு * தைராய்டு குறைபாடு உணவில் மக்னீசியம் கிடைக்க.

* முந்திரி * பாதாம் * பருப்பு வகைகள் * அடர் சாக்லேட் * அத்திப்பழம் * பூசணி விதை * சுரைக்காய் * பழுப்பு அரிசி * பசலை கீரை ஆகியவற்றினை நன்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

மூளையின் திறனை பாதிக்கும் சில செயல்கள். இவற்றினை உடனே நிறுத்துங்கள். வளர்ந்த ஒரு மனிதனின் மூளை 1.3-1.4 கி.கி. இருக்கும். உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் இந்த மூளையே பொறுப்பாகின்றது. ஹார்மோன் செயல்பாடுகள், மூச்சு, ரத்த ஓட்டம், தசைகளின் கட்டுப்பாட்டு இயக்கம், இருதயதுடிப்பு, சிந்தனை, ஒருங்கிணைந்த செயல்பாடு என அனைத்திற்கும் இந்த மூளையே காரணம் ஆகின்றது. ஆகவே இதற்கு அதிக சக்தி தேவை. உங்கள் உடலின் கலோரி சத்தில் 20 சதவீத மூளைக்கே தேவைப்படும். இது வயது, ஆண், பெண், உடல் எடை, மூளைக்கு எத்தனை சவால்களான வேலை இருக்கின்றது என்பதை பொறுத்து கூடலாம் குறையலாம்.

* மூளைக்கு வேலை இருக்க வேண்டும். வேலை இல்லாத மூளை சுருங்கி பயனற்று ஆகி விடும்.

* காலை உணவு மிக மிக முக்கியமானது. ஒரு காபி, டீ கொண்டு மதியம் வரை செல்வது உங்கள் செயல் பாட்டுத்திறனை வெகுவாய் குறைத்து விடும். தொடர்ந்து காலை உணவை தவிர்த்து வருபவர்களுக்கு 36 சதவீத கூடுதலான மூளை பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதே ஆய்வுகள் காலை உணவினை முறையாய் உட்கொள்பவர்கள் நன்கு செயல்படுவதாகவும் கூறுகின்றன.

* குளூகோஸ் கிடைக்காத மூளையால் செயல்பட முடியாது. புரிந்து கொள்ள, நினைவில் வைக்க, செயலாற்ற மிகவும் கடின ம். காலை, உணவினை முறையாய் உட்கொள்பவர்கள் நொறுக்கு தீனி ஆசையின்றி இருப்பர்.

* செல்போனை 24 மணி நேரமும் காதோடு ஒட்ட வைத்து பேசிக் கொண்டே வாழ்பவர்கள் அநேகர். இதன் கதிர் வீச்சினால் தலைவலி, மூளை குழப்பம் என்ற பாதிப்புகளோடு மூளை புற்றுநோய் பாதிப்பும் ஏற்படும். அபாயம் உண்டாகின்றன என்பது ஆய்வுகளின் கூற்று. இரவில் செல்போனை அணைத்து தள்ளி வைத்து விடுங்கள்.

* உடல் நல பாதிப்பு இருக்கின்றதா. ஓய்வு எடுங்கள். ஓரிரு நாள் ஓய்வில் எந்த வேலையும் பெரிய பாதிப்பினை அடைந்து விடாது. சாதாரண சளி பாதிப்பு இருந்தால் கூட அந்த கிருமிகளை எதிர்த்து உடல் அதிகம் போராட வேண்டி உள்ளது என்பதனை அறிந்து கொள்ளுங்கள்.

* சத்து குறைவான கலோரி, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உண்ணாதீர்கள். இந்த பழக்கமும், மிக அதிக எடையும் மூளையின் செயல்பாட்டுத்திறனை குறைத்து. மறதியினையும் கூட்டி விடும்.

* குடும்பம், சமூகம் இவற்றோடு உறவுகள் இல்லாது தனித்து இருந்தால் மனஉளைச்சல், மனஅழுத்தம் கூடி விடும்.

* தேவையான அளவு தரமான தூக்கம் தேவை.

* புகை மூளைக்கு நச்சு என்பதனை உணருங்கள்.

* அதிக சர்க்கரை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் கெடுதல், நரம்பு மண்டலம் உட்பட.

* மாசு மிகுந்த சுற்றுப்புற சூழல் மூளையின் செயல்பாட்டுத் திறனை வெகுவாய் பாதிக்கும்Post a Comment

Protected by WP Anti Spam