காஜலுக்கு பதிலாக `மாரி-2′ படத்தில் தனுஷ் ஜோடியாகும் நடிகை..!!

Read Time:1 Minute, 47 Second

201709281211420273_Who-pairs-with-Dhanush-in-Maari-2_SECVPFதனுஷ் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற படம் `மாரி’ படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் உருவாக இருக்கிறது.

பாலாஜி மோகன் இயக்கவிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயனாக நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் `மாரி-2 படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், `மாரி-2′ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இயக்குநர் பாலாஜி மோகன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

`மாரி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த காஜல் அகர்வால் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துள்ளதால் அவருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாரி-2 படத்தில் புதிய நாயகியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாயகி யார் என்பதை அறிய மாலை 6 மணி வரை காத்திருக்கத் தான் வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்லைக் காட்டினால் பணம் கிடைக்கும்..!!
Next post BiggBoss நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது இவர்தானா?..!!