பெண்களுக்கு மார்பகத்தில் ஏற்படும் அரிப்புக்கான காரணங்கள்..!!

Read Time:3 Minute, 8 Second

201709261220585544_Women-causes-of-itching-in-the-breast_SECVPFபெண்களுக்கு பல ஆரோக்கிய தொந்தரவுகள் இருக்கும். மார்பங்களில் சில காரணங்களால் அர்ப்பு ஏற்படுகிறது. இந்த அரிப்பை சாதாரணமாக நினைத்து விட்டுவிட வேண்டாம். இதற்கான உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இந்த பகுதியில் மார்பகங்களில் ஏற்படும் அரிப்பிற்கான காரணமும், அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

சருமத்திற்கு தேவையான எண்ணெய் பசை மற்றும் தண்ணீர் இல்லை என்றால், அரிப்பு மற்றும் கடுமையான சருமம் இருக்கும். நீங்கள் மிக அதிக நேரம் குளித்தாலோ அல்லது சூடான நீரை பயன்படுத்தினாலோ இது போன்று ஏற்படும். சில சோப்புகள் சருமத்தை வறட்சியடைய செய்யும்.

உங்களது சருமத்திற்கு ஏற்ற மாஸ்சுரைசர் உபயோகிக்க வேண்டும். குளித்து முடித்ததும், ஈரமான சருமத்தை சுத்தமாக துடைத்துவிட்டு மாஸ்சுரைசர் அப்ளை செய்யுங்கள். இயற்கை எண்ணெய்களான தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவை ஒரு சிறந்த தீர்வாக அமையும். இது நீங்கள் உபயோகிக்கும் சோப்புகளில், ஆல்கஹால் மற்றும் பிற கெமிக்கல்கள் இருந்தாலும் காக்கும்.

எக்ஸிமா என்பது சருமத்தின் ஒரு நிலை. இது அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை உண்டாக்கும். இது மார்பகத்திலும் இது போன்ற ஒருநிலையை ஏற்படுத்தும். இது பரம்பரையாகவும் தொடரலாம் அல்லது சுற்றுசூழல் மாசுபாடு காரணமாகவும் உண்டாகலாம்.

இந்த அரிப்பு மற்றும் வறட்சியான சருமத்தை தூண்டும், சோப்புகள், க்ரீம்கள் மற்றும் சில வகையான எரிச்சலை ஏற்படுத்தும் ஆடைகளை தவிர்க்கவும். மன அழுத்தம் இல்லாமல் இருங்கள். அலர்ஜியை ஏற்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டாம்.

சொரியாஸிஸ் என்பது சருமத்தில் ஏற்படும் ஒரு வகையான பிரச்சனை. இது சருமத்தில் எரிச்சலையும், சிவந்த நிறத்தையும் உண்டாக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுவதால் உண்டாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் ஆயில்மெண்ட்களை மட்டுமே பயன்படுத்துங்கள். சருமத்தை பாதிக்க செய்யும் சோப்புகள் மற்றும் க்ரீம்களை பயன்படுத்தாதீர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களுக்கு உடலுறவில் விருப்பம் குறையும் பிரச்சனையும் தீர்வுகளும்..!!
Next post பிக்பாஸ் நல்லவரா, கெட்டவரா? கேமராவிடம் கேட்ட சினேகன்..!!