நிïயார்க்கில் தகர்க்கப்பட்ட இரட்டை கோபுரம் பகுதியில் ஜார்ஜ்புஷ் மலர் அஞ்சலி

Read Time:2 Minute, 18 Second

USA.Sep-11.bush.jpgஅமெரிக்காவின் நிïயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி வந்து மோதி தகர்த்தனர். அந்த 110 மாடி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். உலகையே அதிர்ச்சிக் குள்ளாக்கிய இந்த சம்பவம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி நடந்தது. இதன் 5-வது ஆண்டு நிறைவு தினம் இன்று கடை பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் தனது மனைவி லாராவுடன் நிï யார்க் கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்துக்கு சென்றார். அங்கு அவர் மலர் வளையம் வைத்து இந்த தாக்குதல் சம்பவத்தில் பலியா னவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

அந்த இடத்தின் அருகே இருக்கும் செயின் பால் சர்ச்சுக்கும் புஷ் சென்று பிரார்த்தனை நடத்தினார். ஜார்ஜ்புஷ்சுடன் நிïயார்க் மேயர் மைக்கேல் புரூம் பெர்க்கும் உடன் சென்றார். இன்று மாலை புஷ் நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை நிகழ்த்துகிறார்.

இந்த நிலையில் அல்கொய்தா தலைவர் பின்லேடன் அல்ஜசீரா தொலை காட்சியில் தொன்றி நிïயார்க் கோபுரத்தை தகர்த்த தீவிரவாதிகளை பாராட்டி பேசினான். 92 நிமிடம் இந்த வீடியோ டேப்பை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

உலக வர்த்தக மைய கட்டிடத்தை விமானங்களை மோதி தகர்த்தவர்கள் தியாகிகள். புனித போரில் உயிர் நீத்தவர்களை நாம் பாராட்டுவோம். அரிய சாதனையை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர் என்று பின்லேடன் கூறினான்.

USA.Sep-11.bush.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இங்கிலாந்தில் பதவிச்சண்டை தொடங்கியது – நிதிமந்திரி பிரவுன் பிரதமராக 10 மந்திரிகள் எதிர்ப்பு
Next post ஐரோப்பாவில் புலிகளை முழுமையாக தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!