By 2 October 2017 0 Comments

உடலுறுவில் அதிக ஆசை கொள்வது நல்லதா?… கெட்டதா?…!!

201709271407480060_more-interest-of-intercourse-desire-is-right-or-wrong_SECVPF-333x250உடலுறவு வைத்துக்கொள்வது என்பது அவரவர் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அளவைப் பொருத்து ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலருக்கு தினமும் உடலுறவு வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியாது. சிலருக்கு வாரத்துக்கு இரண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இருமுறை இருந்தால் கூட போதும். ஏன் இந்த வித்தியாசம் தெரியுமா?

ஒவ்வொருவரது உடற்கூறைப் பொருத்து உடலுறவின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்மசாரிகளை விட குடும்ப வாழ்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் தேவைகளில் உணவுக்கு அடுத்தபடியாக உடலுறவு இரண்டாவது இடத்தை பெறுகிறது.

மனிதன் உணவு இல்லாமல் உயிர் வாழ முடியாது. அதைப்போல உடலுறவு இல்லாமல் மனிதன் தொடர்ந்து வாழ முடியாது. அத்துடன் உடலும் உள்ளமும் வளமாக இருந்தால் உயிர் உடலில் நீண்ட நாள் இருக்கும். உடலையும், மனதையும் வளமாக வைத்திருக்க உடலுறவு உதவுகிறது என்பதை மருத்துவ அறிவியல் நிரூபிக்கிறது.

காதலும், காமமும், உடலுறவும் வாழ்கையில் இன்றியமையாதவை. அவற்றைச் சொல்லவேண்டிய முறையில் சொன்னால்தான் மகாபாரதம், ராமாயணம், சாகுந்தலம், சங்கப் பாடல்கள், திருக்குறள் உட்பட எல்லா இலக்கியங்களையும் சுவைத்து அனுபவிக்க முடியும்.

மணமாகாத வாலிபர்களின் இச்சையைத் தூண்டப் பச்சை பச்சையாக உடலுறவுகளை வர்ணித்து சதை வியாபாரம் செய்யும் மலிவு பதிப்புகள், சாலையோர புத்தகக் கடைகளில் மறைத்து விற்கப்படுகின்றன. அவை எல்லாம் ஆபாசமானவை.

வடநாட்டில் கஜூரா, கோனார்க் கோயிலில் உடலுறவு நிலையை அற்புத சிற்பங்களாக வடித்துள்ளனர். தென்னிந்திய கோயில்களிலும் இத்தகைய உடலுறவு நிலைச் சிற்பங்களைக் காணலாம்.

மதம், இதிகாசம், இலக்கியம், சிற்பம், சித்திரம் அனைத்திலும் பாலுறவு பற்றி எழுதப்பட்டுள்ளது. அது தவறானது என்றால் அவ்வாறு எழுதுவார்களா? மனித இனம் ஆதியிலிருந்து இன்றுவரை பாலுறவின் பற்று கொண்டிருக்கிறது. காரணம் அதில் கிடைக்கும் இன்பத்துக்கு ஈடாக வேறு இன்பம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எல்லாப் பிரச்னைகளையும், நோய்களையும் ஒரே ஒரு மருந்தால் தீர்க்க முடியுமா?

முடியும். அது குடும்ப வாழ்க்கையில் உள்ள உடலுறவு ஒன்றால்தான் முடியும்.

தலைவலி, முதுகுவலி, இடுப்புவலி, மனநோய் எல்லாவற்றையும் தீர்க்கமுடியும். உடலுறவுதான் உடலிலுள்ள தடுப்பு சக்தியான இம்யூன்(immune) என்னும் சக்தியைத் துரிதப்படுத்துகிறது. இதனால் அனைத்து உடல் வலிகளும், தசை வலிகளும், நரம்பு வலிகளும், மனநோயும் தீருகின்றன.

ஒருவன் குடும்ப வாழ்கையில் உடலுறவு கொள்ளாதவனாக இருந்தால் மனதில் இறுக்கமும் ஒரு வேகமான கோபமான நிலையும் ஏற்படும். இதற்க்கு காரணம் உடலுறவு கொள்ளாததால் அட்ரினலின் ஹார்மோன் சுரப்பது தான். உடலுறவு கொள்வதால் உயர் ரத்த அழுத்தம் இதய நோயைக் குறைத்து ரத்தத்தை விருத்தியடையச் செய்யும். பெண்களுக்கு மார்பில் கட்டி ஏற்படாது. சளி பிடிக்காது.

அடிக்கடி உடலுறவு கொள்வதால் தேவையான அளவு ரத்த ஓட்டம் அதிகரித்து பெண்களின் உடலிலுள்ள அனைத்து வலிகளும் தீர்ந்து விடும்.
உடலுறவின்போது ஹார்மோன் சுரப்பது தூண்டப்பட்டு பலவிதமான ரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. அவை வலி நிவாரணியாக மருந்தாகப் பெண்களுக்கு அமைந்து நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.

சரியான அளவில் அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்கு செரிமானம் செரிமானம் அதிகமாகிப் பசியெடுக்கும். நல்ல தூக்கம் வரும். அதனால் மன இருக்கம் , கவலை தீரும். மனதில் அமைதி, நிதானம், மகிழ்ச்சி ஏற்படும்.Post a Comment

Protected by WP Anti Spam