சாப்பிட்டபின் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்..!!

Read Time:3 Minute, 12 Second

201710070828262910_Things-to-avoid-after-eating_SECVPFஉடல் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது என்று அறிந்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், சாப்பிட்டபின் என்ன செய்வது என்று அறிந்திருப்பது.

உதாரணத்துக்கு, சாப்பிட்டவுடனே படுக்கையில் விழக் கூடாது. உண்ட உணவு செரிமானம் ஆவதற்கு சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். தூங்கினால் செரிமானத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்காது என்பதால் செரிமான பாதிப்பு ஏற்படும்.

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத மேலும் சில விஷயங்கள்…

உடற்பயிற்சி செய்யும்போது தசைகளுக்கு அதிக ரத்தம் செல்லும். இதனால் செரிமான உறுப்புகள் முறையாகச் செயல்பட போதிய ரத்தம் கிடைக்காது. எனவே சாப்பிட்டு முடித்த வுடனே உடற்பயிற்சியில் ஈடுபடக் கூடாது. சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரம் கழிந்த பிறகு உடற்பயிற்சியில் ஈடுபடலாம். பொதுவாக வெறும் வயிற்றில் உடற் பயிற்சி செய்வதே நல்லது. காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால், செரிமான உறுப்புகளால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக்கொள்ள முடியாது.

சாப்பிட்டவுடன் குளிப்பதும் சரியல்ல. அப்போது, கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்று, செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இல்லாது போகும். இதனால் நாளடைவில் செரிமான உறுப்புகள் வலுவிழந்துவிடும். சாப்பிட்டுவிட்டால் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகே குளிக்க வேண்டும். உருளைக் கிழங்கு சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் சாப்பிடவேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை கழிவுகளுடன் வெளியேற்றும். இதனால், உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் செரிமானம் ஆகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். எனவே சாப்பிட்டு சில மணி நேரம் கடந்தபிறகு அல்லது சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பழங்களைச் சாப்பிட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் வடிவேலுவை தமிழில் பேசி கலக்கிய வெளிநாட்டு வெள்ளையர்கள்…!! (வீடியோ)
Next post வான் பரப்பில் திடீரென ஏற்பட்ட ஆபத்து! பதற்றத்தில் மக்கள்…!! ( வீடியோ)